/* */

காமராஜர் முன் கண்ணீர் விட்ட சோ ராமசாமி

பொதுவாக எப்போதுமே நடிகர் சோ ராமசாமி கண்கலங்கியதில்லை. அவரின் பத்திரிகை அரசால் முடக்கபட்ட போது கூட "கழுதைகளுக்கு நல்ல தீனி, அந்த புண்ணியம், என்னைச் சேரும்" எனச் சொல்லி சிரித்தவர் சோ. அப்படிபட்ட சோ கண்ணீர்விட்ட காட்சி ஒன்று, காமராஜருடைய சந்திப்பில் நடந்திருக்கிறது.

HIGHLIGHTS

காமராஜர் முன் கண்ணீர் விட்ட சோ ராமசாமி
X

முன்னாள் முதல்வர் காமராஜர் - நடிகர் சோ ராமசாமி.

சோ ராமசாமிக்கு, கர்ம வீரர் காமராஜர் மேல் நல்ல அபிமானம் இருந்தது, இவ்வளவுக்கும் டெல்லி காங்கிரஸை தாக்குகிறார் என காமராஜருக்கு, சோ மேல் கோபமும் இருந்தது. சோ ராமசாமியின் நாடகங்களுக்கு கூட காமரஜர் அனுமதி மறுத்த காலம் உண்டு. ஆனால், அவர்களுக்குள் உறவு நீடித்தது.

அன்றைய காலகட்டத்தில், காமராஜர் வசித்த வாடகை வீட்டை சொந்தவீடு என்றும், காமராஜர் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார் என்றும் பொய்யான பிரசாரங்கள் நடந்து வந்தது. அப்பொழுது டெல்லியில் இருந்து காங்கிரஸ் அரசின் உயர்மட்ட ஆட்கள் காமராஜரை காண வருவார்கள். காமராஜர் பெரும்பாலும் அவர்களை, இதர காங்கிரஸ் பிரமுகரின் வீட்டுக்கு தங்க அனுப்பி விடுவார்.


இதையும் கண் கொத்தி பாம்பாக காணும் சிலர், அடிக்கடி ஊழலுக்கு துணை போகிறார் காமராஜர், பண்ணையார் வீடுகளில் டெல்லிக்காரனுக்கு என்ன வேலை?, தரங்கெட்ட தரகரா அவர் என்றெல்லாம் எழுதிக் குவித்தனர்.

அச்செய்தி காமராஜரை கொஞ்சம் பாதித்தது, அப்பொழுது காண சென்றிருந்தார் சோ. அவரிடம் கொஞ்சம் ஆத்திரமாக கேட்டார் காமராஜர். "நீ அடிக்கடி இங்க வாரே, உன்னை என்னைக்காவது சாப்பிடுன்னு சொல்லிருக்கேனா..?"

'இல்லை' என, தலையாட்டினார் சோ.

"ஒரு கிளாஸ் டீ தந்திருக்கேனா?"

'இல்லை' என்றார் சோ.

"கண்ணதாசன், அவர் இவர்னு எவ்வளவு பேர் வந்துட்டு போறாங்க, யாராவது என் கூட சாப்பிட்டாங்கண்ணு ஒரு இடத்துல கேள்விப்பட்டிருக்கியா?''

'இல்லை' என அவரையே உற்று பார்த்தார் சோ.

"நேரு கூட இங்க வந்து என் கூட சாப்பிட்டதில்லண்ணே..." என சொன்ன காமராஜரின் குரல் கம்மிற்று, உடைந்த குரலுடன் சொன்னார். "இங்க அவ்வளவு தான் வசதிண்ணே, இது ஒண்டிகட்டை வசிக்கும் வாடகை வீடு. இங்க எப்படி நல்ல சாப்பாடும் வசதியும் இருக்கும்ணே. எனக்கு தேவை 2 இட்லியும் கொஞ்சம் சோறும் தாம்ணே, அத தவிர இங்க ஏதும் இருக்காதுண்ணேன்.

பெரியவங்க வந்தா உபசரிக்க என்கிட்ட ஏது வசதி? அதனால்தான் வசதியானவன் வீட்டுக்கு அனுப்புறேன், நான் என்ன நேரு பரம்பரையாண்ணேன். அது புரியாம என்ன அவனவன் என்னமோ பேசுறான் பார்த்தியா.. என் சம்பளம் எனக்கும் இந்த வீட்டு வாடகைக்கும் என் தாய்க்கும் கூட பத்தாதுண்ணேன்...."

சோ கண்ணீர் விட்ட இடம் அது தான். அது ஒன்றுதான், அந்த கண்ணீர் ஒரு எளிய அப்பாவி தலைவனின் உள்ளத்தை அப்படியே காட்டிய சத்திய கண்ணீர்.

கிண்டல், கேலி, நையாண்டி செல்வதில் கில்லாடி தான் சோ. அதுவும் அரசியல்வாதிகளின் குறைகளை, குற்றங்களை ஒரு பத்திரிகையாளராக அவர், விட்டு வைத்ததே இல்லை. ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கைகளில் சோ ராமசாமிக்கு முக்கிய இடம் உண்டு. அவரிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்பாராம் ஜெயலலிதா. இப்படிப்பட்ட சோ, காமராஜரின் உண்மை நிலையை அவரே கூறியதை கேட்டு கண்ணீர் சிந்தியிருக்கிறார்.

Updated On: 9 Dec 2022 2:21 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது