/* */

ஒசூரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி : ஆவணமில்லாத ரூ.25 லட்சம் பறிமுதல்

ஒசூரில் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 25 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

Election Flying Corps
X

பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 லட்சம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டது .இதன் தொடர்ச்சியாக கடந்த 26ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது.

இதனைத்தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி 19 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பறக்கும் படை அமைத்துள்ளார்.

இந்நிலையில் ஓசூர் மாநகராட்சி முழுவதும் பறக்கும்படை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக ஒசூர் மாநகராட்சியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஜெனிஃபர் மற்றும் காவல்துறையினர் தர்கா பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது காரில் ரோஹித் மற்றும் மித்லேஷ் ஆகிய இருவரிடம் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் காரில் இருந்து உரிய ஆவணம் இன்றி ரூ. 25 லட்சத்தை கொண்டு சென்றதை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

மேலும் இது குறித்து வருமானவரித்துறை அலுவலரிடம் ரூ.25 லட்சம் ஒப்படைத்தனர். அங்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஓசூரை சேர்ந்த தொழில் அதிபர் பாக்கிய குமார் என்பவர், பர்கூர் பகுதியில் கல் குவாரி நடத்தி வருகிறார். அவருடைய உதவியாளர்கள் ஆனேக்கல் பகுதியில் பணம் வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்துவதற்காக வீட்டிற்கு கொண்டு வரும்போது பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 8 Jun 2022 6:18 AM GMT

Related News