/* */

About Us

எங்களைப் பற்றி…(ஓர் அறிமுகம்)


#InstaNews இணையதளம், தமிழகத்தின் தனித்த அடையாளத்துடன் உதயமாகி உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வருகிறது.

அனுபவம் பெற்ற ஆசிரியர் குழு, தாமதமின்றி செய்திகளை வழங்கும் செய்தியாளர்கள், சிறந்த நிர்வாக பின்புலம் பெற்றுள்ளமை #InstaNews-க்கு பெருமை சேர்ப்பவை ஆகும்.

நடைமுறை செய்திகள், அரசியல், சினிமா,விளையாட்டு, வணிக செய்திகள், உள்ளூர் பொருட்களின் விலை விவரங்கள் தொடங்கி ஆன்மீகம், லைஃப் ஸ்டைல், தொழில்நுட்பம், சுற்றுலாத்தலங்கள், வாகனங்கள், வேலைவாய்ப்பு, மருத்துவம், விவசாயம் என பல்சுவை செய்திகளை தாங்கி வருகிறது, #InstaNews.

சுருக்கமாக ஆனால், செறிவுமிகு செய்திகளை வழங்குவதில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறது. தமிழக செய்திகள் மட்டுமன்றி தேசிய செய்திகள் மற்றும் சர்வதேச செய்திகளையும் வழங்குவதில் முன்னோடியாக திகழ்கிறது.

தரமான செய்திகளை வழங்குவதில் எந்த சமரசமும் ஏற்படுத்திக் கொள்ளாத நடுநிலை #InstaNews -க்கான தனி அடையாளம். உள்ளதை உள்ளபடி நேர்மையுடன் சொல்லும் இணையதளம்.

சமூக முன்னேற்றத்திற்கு எங்கள் முயற்சிகள் பெரிதும் துணையாக இருக்கும். கலாசாரம்,பாரம்பரியம் பின்பற்றுவதிலும், சாதி,மத வேறுபாடுகளை மறந்து, பொருளாதார ரீதியாகவும் ஒரு சமத்துவ சமூகம் மலர எங்களின் செய்திகள் உறுதுணையாக அமையும்.

#InstaNews-க்கென தனி வாசகர்களை உருவாக்கும் முயற்சியில் எங்களின் இனிய பயணம் தொடர்கிறது.

வாசியுங்கள் வளர்கிறோம்.

நேசியுங்கள் உங்களின் #InstaNews-ஐ.