/* */

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால் அச்சம்

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

HIGHLIGHTS

ஈரோடு: கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பேருந்தை வழிமறித்த யானையால் அச்சம்
X

அரசு பேருந்தை வழிமறித்த காட்டு யானை.

கடம்பூர் மலைப்பகுதியில் அரசுப் பேருந்தை ஒற்றை காட்டு யானை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில், சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனவிலங்குகள், அவ்வப்போது உணவுக்காக இடமாறும் போது, கடம்பூர் மலைக்கிராமங்கள் வழியாக செல்லும் சாலைகளை கடந்து செல்லும்.

சாலையோரம் உள்ள மூங்கில் செடிகள், பழ மரங்களை தேடி வருவதுண்டு, இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று, சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர்- காடகநல்லி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து முன்பு நின்று வழிமறித்தது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் அலறினர். பேருந்தில் இருந்த சில பேர் யானை பேருந்தை வழிமறித்து நின்ற காட்சியை வீடியோ பதிவு செய்தனர். சிறிது நேரம் அங்குமிங்கும் போக்கு காட்டிய காட்டு யானை சிறிது நேரம் கழித்து சாலையின் ஓரமாக சென்று வனப்பகுதிக்குள் மறைந்தது. யானை வனப்பகுதியில் சென்ற பிறகு அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை அங்கிருந்து கிளப்பினார். அதன் பிறகே அச்சத்துடன் இருந்த பயணிகள் பெருமூச்சு விட்டனர்.

Updated On: 25 April 2024 9:53 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு