/* */

திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா

திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
X

திருவள்ளூரில் அதிமுக சார்பில் நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பிவி ரமணா திறந்து வைத்தார்.

திருவள்ளூர் நகரத்தில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்.


அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவுறுத்தலின் பேரில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க பொது மக்களுக்கு குளிர்ச்சியான பொருட்களை வழங்க உத்தரவிட்டிருந்தார். அதன் பேரில் திருவள்ளூர் ரயில் நிலையம்,ஆயில்மில், தலைமை தபால் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் எதிரில் ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா திருவள்ளூர் நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் குளிர்ச்சியான தர்பூசணி, மோர், ரோஸ் மில்க், வெள்ளரி பிஞ்சு, திராட்சை பழ ஜூஸ், கிருணிப்பழம் ஜூஸ் என குளிர்ச்சியான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதில் மாவட்ட பொருளாளரும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலருமான பாண்டுரங்கன், திருவள்ளூர் நகர அதிமுக செயலாளர் ஜி.கந்தசாமி, நிர்வாகிகள் ராம்குமார், கவுன்சிலர்கள் செந்தில்குமார், சித்ரா விஸ்வநாதன் மற்றும் பாலாஜி, குமரசேன்,எஸ்.ஏ.நேசன், ஜோதி, விஜயகாந்த் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 April 2024 10:43 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. இந்தியா
    தினமும் இருமுறை மறைந்து தோன்றும் சிவன் கோயில்!
  3. இந்தியா
    பிரதமர் வேலை வாய்ப்பு திட்டத்தில் கடனுதவி! எப்படி வாங்குவது?
  4. சென்னை
    அடுத்த 3 நாட்கள்... பெரும் புயல் ... வெதர்மேன் எச்சரிக்கை.!
  5. அரசியல்
    கலகலக்கும் கட்சி : அதிமுகவில் என்ன நடக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழ்நாட்டு பொங்கல் - கர்நாடக சங்கராந்தி: ஒற்றுமையும் வேற்றுமையும்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீடு புகுந்து நகை மற்றும் ரொக்கம் திருட்டு..!
  8. ஆரணி
    ஆரணியில் கோட்டையின் தடயங்கள் கண்டுபிடிப்பு..!
  9. தமிழ்நாடு
    தமிழ்நாடு அரசின் 'தோழி பெண்கள் தங்கும் விடுதி'..!
  10. அரசியல்
    நடுங்கும் கட்சி நிர்வாகிகள் : திமுகவில் என்ன நடக்கும்?