/* */

EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!

ஓட்டுப்பதிவு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிக்க தனி லைன் மூலம் கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
X

பட விளக்கம் : திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரி ஓட்டு எண்ணும் மையத்தில், எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு மெசின்கள் வைக்கப்பட்டுள்ள, பாதுகாப்பு அறைகளை மாவட்ட கலெக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன்.

ஓட்டுப்பதிவு மெசின்கள் உள்ள அறைகளை கண்காணிக்க தனி லைன் மூலம் கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்

நாமக்கல்,

நாமக்கல் லோக்சபா தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை நேரடியாக கண்காணிக்க, தனி லைன் மூலம், கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

நாமக்கல் லோக்சபா தொகுதியில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு ஆகிய, 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அவற்றில், கடந்த, ஏப். 19ல் ஓட்டுப்பதிவு நடந்தது.

தேர்தலில் அமைக்கப்பட்ட, 1,661 ஓட்டுச் சாவடிகளில் பதிவான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவி, விவிபேட் ஆகியவை, ஓட்டு எண்ணும் மையமான திருச்செங்கோடு, விவேகானந்தா மகளிர் இன்ஜினியரிங் கல்லூரி வளாகத்தில் தனித்தனி அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில், தலா, 3 பேர் வீதம், கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி., மற்றும் இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள், 15 பேர், போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் என, சுழற்சி முறையில், ஒரு ஷிப்ட்டிற்கு 83 பேர் வீதம், மொத்தம் 249 பேர், இரவு பகல் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், ஓட்டு எண்ணும் மையம் அமைந்துள்ள கல்லூரி வளாகம் முழுவதும், 310 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, எல்.இ.டி., டிவி மூலம் கட்டுப்பாட்டு அறை அமைத்து, 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது ஓட்டு எண்ணும் மையத்தில் மேலும், 10 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 6 சட்டசபை தொகுதிகளில் பதிவான எலக்ட்ரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 10 பாதுகாப்பு அறைகளில் வைத்து சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த ரூம்களை தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோர் நேரடியாக கண்காணிக்கும் வகையில், தனி லைன் மூலம், 10 சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு, ஓட்டு எண்ணிக்கை மையம் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Updated On: 5 May 2024 1:30 AM GMT

Related News