/* */

ரூ.300 கோடியில் புதுப்பொலிவு பெற போகிறது திருச்செந்தூர் முருகன் கோவில்

திருச்செந்தூர் முருகன் கோவில்ரூ.300 கோடியில் புதுப்பொலிவு பெற இருக்கும் திட்டத்தை முதல் அமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

ரூ.300 கோடியில் புதுப்பொலிவு பெற போகிறது திருச்செந்தூர் முருகன் கோவில்
X

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகும். தேவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த பத்மாசுரனை வதம் செய் இடம் திருச்செந்தூர் ஆகும். கடற்கரை ஓரம் அமைந்துள்ள இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கூறப்படுவது உண்டு.

திருச்செந்தூர் கோவில் கடற்கரை அருகில் சித்தர்கள் சிலரின் சமாதிகளும் உள்ளன. அய்யா வைகுண்டர் முக்தி அடைந்த இடமும் திருச்செந்தூர் கடற்கரை தான் ஆகும்.


திருச்செந்தூர் அருள்மிகு முருகன் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவது உண்டு. இது தவிர தமிழகத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினரும் திருச்செந்தூர் கோவிலின் அற்புதங்களை கண்டு களிக்க தவறுவதில்லை. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது தவிர ஐப்பசி மாசம் நடைபெறும் சூரசம்ஹாரம் விழாவை நேரில் காண்பதற்காக கூடும் பக்தர்கள் கூட்டம் கடலா கடல் அலையா என நினைக்கும் அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அலைமோது உண்டு. மேலும் இக்கோவில் சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இக்கோவில் வளாகத்தில் இரவில் தங்கி அதிகாலை நடைபெறும் விருவரூப தரிசனத்தில் முருகனை வழிபட்டால் தோஷங்கள் உள்பட பல வியாதிகள் மறைந்து போவதாக மக்கள் நம்புகிறார்கள்.அத்தகைய சிறப்புக்குரிய திருச்செந்தூர் முருகன் கோவிலில் போதுமான அடிப்படை வசதிகள் கிடையாது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பல நாட்கள் கன மழை பெய்த போது திருச்செந்தூர் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது.முறையான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் ஊர வெள்ளத்தில் மிதந்தது மட்டும் இன்றி கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது.


திருச்செந்தூர் முருகன் கோவில் இன்று வரை ஒரு கிராமப்புற சூழலிலேயே இருந்து வருகிறது .தங்கும் வசதிகள், விடுதி வசதிகள் போதுமான அளவில் இல்லை. இதன் காரணமாக கோவிலில் தரிசனத்திற்காக வரும் வெளிமாநில பக்தர்கள் முகம் சுளிப்பது உண்டு. திருச்செந்தூர் முருகன் கோவிலை புதுப் பொலிவுடன் சீரமைக்க வேண்டும் என்பது பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையாகும்.அந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கோவிலின் பழமை மாறாமல் சீரமைக்க முடிவு செய்துள்ளது.


இக்கோவிலை 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் முழுமையான பணிகள் மற்றும் இதர பணிகள் பெருந்திட்ட வரைவு திட்டத்தின் படி உபயதாரர் ஒருவரின் அன்பளிப்போடு மேலும் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கோவில் உள்கட்ட அமைப்பு மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்துதல், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய வரிசை முறை, காத்திருப்போர் அறை,நடைபாதை வசதி,மருத்துவ மையம் ஓய்வுஅறை ஏற்படுத்துதல் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.பொது அறிவிப்பு கட்டுப்பாட்டு அறை தீத்தடுப்பு கண்காணிப்பு, முடி காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதான கூடம், கோவில் வளாகத்தில் சாலை வசதி ஏற்படுத்துதல் ஆகிய மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

கோவில் நிதி மூலமாகரூ. 100 கோடி மதிப்பில் பக்தர்கள் பயன்பாட்டிற்கான தங்கும் விடுதிகள், சலவை கூடம் சுகாதார வளாகம் ,பஸ் நிலையம் ,திருமண மண்டபங்கள் கட்டப்பட இருக்கிறது. இது தவிர பஞ்சாமிர்தம் மற்றும் விபூதி தயாரிப்பு கட்டிடம், பணியாளர்கள் குடியிருப்பு, கோவிலின் கிழக்கு கடற்கரை பகுதியில் கடல் அரிப்பை தடுக்கும் வகையில் பாதுகாப்பு தடுப்புச் சுவர் அமைத்தல் ஆகிய மேம்பாட்டு பணிகள் என மொத்தம் 300 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட இருக்கிறது .இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் திருச்செந்தூர் முருகன் கோவில் நிச்சயமாக புதுப்பொலிவு பெறும் என்பதில் ஐயமில்லை.


இந்த பணிகளை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் .இந்த நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி .கே .சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுலா மற்றும் பண்பாடு அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன் எச்.சி.எல். நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாலை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளை அகலப்படுத்தி முறையான மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்துதல் மற்றும் கழிவு நீரை பராமரிக்க இந்த திட்டத்தின் சேர்த்து நகரை தூய்மையான நகராக மாற்ற வேண்டும் என்பது திருச்செந்தூர் மாநகர மக்களின் முக்கியமான கோரிக்கையாகும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலை திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு இணையாக மாற்ற வேண்டும்.அப்படி மாற்றப்பட்டால் கோவில் வருவாயும் தற்போது உள்ளதை விட பல மடங்கு பெருகும். மேலும் தரிசன முறையில் மாற்றங்கள் கொண்டு வரப்படவேண்டும். பக்தர்களை வழிமறித்து விதிமுறைகளுக்கு மாறாக அழைத்து செல்லும் குருக்களின் அட்டகாசத்திற்கு தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் சென்னை மற்றும் பிற ஊர்களில் இருந்து தற்போது உள்ளதை விட கூடுதல் ரயில் வசதியும் ஏற்படுத்தி தரவேண்டும்.

Updated On: 29 Sep 2022 12:04 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!