/* */

TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு

TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

HIGHLIGHTS

TNPSC: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முக்கிய அறிவிப்புகள் வெளியீடு
X

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த செப்டம்பர் 14ம் தேதி அறிவிக்கையில், 22.12.2022 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில், ஏழு தேர்வு மையங்களில் எழுத்து / கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த சிறை அலுவலர் (ஆண்கள்) மற்றும் சிறை அலுவலர் (பெண்கள்) பதவிகளுக்கான தேர்வானது 26.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகலில் சென்னை, கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், இராமநாதபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர், அரியலூர், செங்கல்பட்டு ஆகிய 24 தேர்வு மையங்களில் கணினி வழித் தேர்வாக (CBT Method) நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி- VI) பதவிக்கான கொள்குறிவகை தேர்வு, 04.12.2022 முற்பகல் தாள்-I OMR முறையிலும் தாள்-II & தாள்-III கணினி வழித் தேர்வாகவும் 05.12.2022 முதல் 10.12.2022 முற்பகல் மற்றும் பிற்பகல் & 11.12.2022 முற்பகல் 07 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டுகள் (Hall Ticket) தேர்வாணையத்தின் இணைய தளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் (OTR Dashboard) மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட நுழைவு சீட்டினை (Hall Ticket) பதிவிறக்கம் செய்ய முடியும்.

மேலும் ஒருங்கிணைந்த புள்ளியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் கடந்த அக்டோபர் 20ம் தேதி அறிவிக்கை வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 11.01.2022 மு.ப மற்றும் பி.ப. அன்று நடைபெற்று, எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் 22.03.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையில் புள்ளியியல் உதவியாளர் மற்றும் குடும்ப நலத்துறையில் வட்டார சுகாதார புள்ளியலாளர் ஆகிய பதவிகளுக்கான மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 05.12.2022 அன்று சென்னை-03, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறையில் கணக்கிடுபவர் மற்றும் தடுப்பூசி பண்டகக் காப்பாளர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை எண், இடஒதுக்கீட்டு விதி மற்றும் காலிப்பணியிடங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக தெரிவாளர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய "அழைப்புக்கடிதத்தினை" விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in - லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-mail மூலம் தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு பங்கேற்க அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வில் அவரவர் பெற்ற மதிப்பெண்கள் / ஒட்டுமொத்த தரவரிசை / இடஒதுக்கீட்டு விதிகள் / விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் மேற்படி மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வர தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

Updated On: 1 Dec 2022 2:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?