/* */

குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!

வசதி வாய்ப்புமிக்க குடும்பத்தில் பிறந்தாலும் முத்துராமலிங்கத் தேவர் தனது ஒரு வயதில் தாயை இழந்துவிட்டார். தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார்.

HIGHLIGHTS

குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
X

Muthuramalinga Thevar Quotes Tamil

முத்துராமலிங்க தேவர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் என்ற ஊரில் 1908 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி பிறந்தார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் ஆன்மீகத் தலைவர் மற்றும் முக்குலத்தோர் சமூகத்தில் ஒரு தெய்வமாக பார்க்கப்பட்டார்.

Muthuramalinga Thevar Quotes Tamil

முக்குலத்தோர் சமூகத்தினர் இன்றும் அவரது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழாக்களில் சிலைக்கு கோயில்களில் உள்ள தெய்வங்களுக்கு பிரசாதம் வழங்குகிறார்கள். 'வர்ணாசிரமத்தை' ஆதரித்ததால் பாரம்பரிய இந்து மதத்தை அவர் ஏற்கவில்லை. இந்து மதத்தின் தீமைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடினார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பொன்மொழிகள்

தமிழனை யாராலும்

வெல்ல முடியாது நம்மிடையே

உள்ள வஞ்சகம்.. சூழ்ச்சி..

பொறாமை.. பதவி..

பணத்தாசை.. இவை தான்

நம்மை அடிமையாக்கியதே தவிர

வீரமோ ஆயுதமோ கிடையாது.

ஓடுகிற தண்ணீர் ஆன்மீகம்

அது மண்ணையும் மனிதனையும்

வளமாக்கும்.. தேங்கி கிடைக்கும்

குட்டை நீர் நாத்திகம்

அதில் புழுப் பூச்சிகள் உண்டாகி

மண்ணையும் மனிதனையும்

அழித்து விடும்.

Muthuramalinga Thevar Quotes Tamil

மனிதனுக்கு துணிச்சலை

போன்ற உண்மையான

நண்பன் உலகில் வேறு

யாருமில்லை.. பிரச்சனைகளை

சந்திக்காமல் வாழ நினைப்பவன்

வாழ தகுதி இல்லாதவன்.

யாவரும் வாழ்க என்று

சொல்லுங்கள்..

ஒழிக என்று சொல்லாதீர்கள்..

நல்லவைகள் வாழ்க என்று

சொன்னால் நீங்கள்

நினைக்கின்ற கெட்டவைகள்

ஒழிய தானே செய்யும்.

நான் எந்த ஜாதியோ அல்லது

மதமோ கிடையாது

நான் வெறும்

ஆன்மா மட்டுமே.

இறைவனை வெளியில்

தேடாதே.. இறைவனை

உனக்குள் தேடு.

கடவுளை உணர

கற்றுக்கொள்ளுங்கள்

அதன் பின்பு எல்லாமே

வெற்றி தான்.

Muthuramalinga Thevar Quotes Tamil

உன்னுடைய வீரம் தான்

எதிரியும் புகழும் படியான

நிலையை உருவாக்கும்..

கோழைத்தனம் அவ்வாறு

செய்யாது.

பிரச்சனைகளை சந்திக்காமல்

வாழ நினைப்பவன் வாழ

தகுதியற்றவன்.

பூவின் நறுமணம் எவ்வாறு

இருக்கும் என்று கேட்டால்

அதை விளக்கவா முடியும்.?

அதை நுகர்ந்து உணரத்தான்

முடியும். அதுபோலவே

கடவுள் இருப்பதை நம்மால்

உணர மட்டுமே முடியும்.

பொறுப்புள்ள பெரிய

மனிதர்களை மதித்து

மரியாதை செய்யலாம்..

ஆனால் அவர்கள் பெரியவர்கள்

என்பதற்காக உங்கள் உயிருக்கு

நிகரான கொள்கைகளை

அவர்களுக்கு தியாகம்

செய்யாதீர்கள்.

Muthuramalinga Thevar Quotes Tamil

பகலில் நட்சத்திரங்கள்

கண்ணனுக்கு தெரிவதில்லை

அதற்காக நட்சத்திரங்கள்

இல்லை என்று வாதிட முடியாது..

நம்மால் நம் கண்ணை

பார்க்க முடிவதில்லை அதனால்

கண் இல்லை என்று

அர்த்தம் கிடையாது.

சாதியும் நிறமும்

ஆன்மீகத்துக்கு இல்லை.

அரசியல்

நான் பேசுவது.. எழுதுவது..

சிந்திப்பது.. சேவை செய்வது

எல்லாமே என் தேசத்திற்காகவே

எனக்காக அல்ல.

தான் வாழ பதவி தேவை என்று

கருத்துபவர்களிடம் உண்மைக்கு

எதிரானவற்றை தான்

எதிர்பார்க்க முடியும்.

பதவியை ஒரு சேவையாக

கருத்துபவர்களிடமே ஆட்சி

இருக்க வேண்டும்..

அப்படி இல்லாமல் போனால்

மக்களுக்கு நலன் என்பது

வெறும் கனவு தான்.

Muthuramalinga Thevar Quotes Tamil

எவன் ஒருவன் தன் சாதி

பெயரை முன்னிலைப்படுத்தி

அரசியல் செய்கின்றானோ

அவனே சமுதாயத்தின்

முதல் எதிரி.

சாத்திய சிந்தனை கொண்டவன்

அரசியலுக்கு வந்தால்

நாடு நாசமாகி விடும்..

அவன் பாவி.. சாதிய எண்ணம்

கொண்டவன் இறைவனை

வழிபடவே தகுதியற்றவன்.

பணம் கொடுத்து ஓட்டு

கேட்பவன் பாவி..

பணம் பெற்று ஓட்டு போடுபவன்

நாட்டுத் துரோகி.!

இனப்பற்று என்பது

எல்லோருக்கும் தேவை.

அதை நல்ல காரியங்களுக்கு

பயன்படுத்துவது உத்தமம்

கெட்ட காரியங்களுக்கு

பயன்படுத்துபவன் மகாபாவி.!

Muthuramalinga Thevar Quotes Tamil

தவறுகள் நடப்பது

கெட்டவர்களால்இல்லை..

தவறுகள் நடப்பதை

அமைதியாக வேடிக்கை

பார்க்கும் நல்லவர்களால்.

மானத்தை பெரிதாக

கருத்துபவனுக்கு மரணம்

ஒரு விடயம் அல்ல..

மரணிக்க துணிந்தவனுக்கு

சமுத்திரம் முழங்கால் மட்டம்.

பெண்களை தாயாகவும்

தங்கையாகவும்

நினைப்பவர்களை தான்

மனிதன் எனலாம்.

தனியாக இருக்கும் போது

சிந்தனை செய்வதில் கவனம்

செலுத்துங்கள்.. கூட்டத்தோடு

இருக்கும் போது வார்த்தைகளில்

கவனமாக இருங்கள்.

ஞானிகள் அடக்கமாக

இருப்பார்கள் அவர்களின்

நிலையை சோம்பேறிகள்

நிலை என்று எண்ணுவது

தவறு.

Muthuramalinga Thevar Quotes Tamil

மனிதன் ஆபாசங்களில்

எளிதில் சிக்கி விடுகிறான்.

அது அவனை குலைத்து

குன்றி விடுகிறது.

வீரம் அற்ற அகிம்சை

கபடம் எனும் மோசமான

நிலையை அடைந்து விடும்.

ஒழுக்கத்திற்கு என வைத்த

கட்டுப்பாடுகள் வயிற்றுப்

பிழைப்பிற்கென கைவிடப்பட்டன.

அதிக பணம் திரட்டும் ஆசையில்

ஒழுக்கம் அழிந்து விட்டது.

கடவுளை தொழ வேண்டிய

விதம்.. தொழ நினைப்பவனுடைய

பக்குவத்திற்கு ஏற்றவாறு

பல வகைப்படும்.

நாகரிகத்தின் பெயரால்

ஒழுக்கத்தை கை விட்டதனால்

நாடெங்கும் கேடுகள்

பரவி விட்டன.

எல்லோரிடத்திலும்

தெய்வம் உண்டு.. ஆனால்

எல்லோரும் தெய்வத்துடன்

இல்லை.

Muthuramalinga Thevar Quotes Tamil

நூறு ஏழைகள் ஒரு

பணக்காரனை உண்டாக்குகிறார்கள்.

ஒரு பணக்காரன் ஆயிரம்

ஏழைகளை உண்டாக்குகிறான்.

சாவுக்கு பயம் இல்லாதவனே

சாதிக்கும் சக்தியினை

பெறுகிறான்.

மனிதனை உயர்ந்தவர்

தாழ்ந்தவர் என ஒழுக்கத்தின்

பெயரால் மட்டுமே மரியாதை

கொடுக்க வேண்டுமே தவிர

சாதியை வைத்து அல்ல.

Updated On: 27 April 2024 12:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!