திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகல் அறிவிப்பு

Subbulakshmi Jagadeesan -தி.மு.க துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கட்சியிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன்  விலகல் அறிவிப்பு
X

சுப்புலட்சுமி ஜெகதீசன்.

Subbulakshmi Jagadeesan -திமுக துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்ததாக நேற்று தகவல் பரவியது. கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருந்ததாகவும், இதனால் அவர் ராஜினாமா செய்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர் தனது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால், சுப்புலட்சமி தனது பதவியிலிருந்து விலகியதாக நேற்று வெளியான தகவல்களை அவர் மறுத்தார்.

இந்நிலையில், சுப்புலட்சுமி ஜெகதீசன் தான் கட்சியிலிருந்து விலகுவதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசியலில் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் விலகல் கடிதம் அளித்துள்ளேன். அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தினால் ஆகஸ்ட் 29ம் தேதி அன்றே திமுகவில் இருந்து விலகிவிட்டேன்.

முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின் நாடே பாராட்டும் வகையில் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார். சுப்புலட்சுமி ஜெகதீசனின் ராஜினாமா ஏற்கப்படும் பட்சத்தில் அந்த இடம் காலியாகும். அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழு கூட்டத்தில் புதிதாக துணை பொதுச் செயலாளர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது.அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 2022-09-21T10:23:35+05:30

Related News

Latest News

 1. குமாரபாளையம்
  குமாரபாளையம் இன்றைய கிரைம் செய்திகள்
 2. திருமங்கலம்
  மதுரை திருமங்கலம் பள்ளி மாணவிகளின் 25 ஆண்டு கால மலரும் நினைவுகள்
 3. பெரம்பலூர்
  பெரம்பலூர் அருகே சுங்கச்சாவடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
 4. அரவக்குறிச்சி
  தென்னிலை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு இப்படி ஒரு நிலை ஏற்பட காரணம்...
 5. குமாரபாளையம்
  பூசணியை சாலையில் உடைக்க கூடாது என விழிப்புணர்வு பிரச்சாரம்
 6. உலகம்
  இயற்பியலுக்கான நோபல் பரிசு2022: மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது
 7. தமிழ்நாடு
  கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி இறந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு நிதி உதவி
 8. தொழில்நுட்பம்
  விடைபெற்றது மங்கள்யான்: செவ்வாய் கிரக ஆய்வுக்கு பாதை வகுத்த
 9. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் ஆயுதபூஜை பொருட்கள் வாங்க குவிந்த கூட்டம்
 10. தஞ்சாவூர்
  வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டம்: தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சமாவது மரம்...