/* */

500 படங்கள் நடித்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்..!

எம்ஜிஆர், சிவாஜி படங்களில் இருந்து வடிவேலு, விவேக் படங்கள் வரை 500 படங்களில் நடித்த ரங்கம்மாள் பாட்டி இன்று காலமானார் !

HIGHLIGHTS

500 படங்கள் நடித்த ரங்கம்மாள் பாட்டி காலமானார்..!
X

எம்ஜிஆர், , சிவாஜி படங்களில் இருந்து வடிவேலு, விவேக் படங்கள் வரை 500 படங்களில் நடித்தவர் ரங்கம்மாள் பாட்டி. எராளமான படங்களில் நகைச்சுவை காட்சிகளில், குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் ரங்கம்மாள் பாட்டி, வயது 85. உடல் நலக்குறைவால் இன்று காலமானார்!

1967ல் திரைப்படத்தின் முலம் நடிக்கத் தொடங்கி நிலையில், தற்போதுவரை 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் வறுமையில் இருந்தார். இவருக்கு சில நடிகர்கள் அவ்வபோது உதவி செய்து வந்த நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே உடல்நிலை மோசமான நிலையில் இருந்த ரங்கம்மாள் பாட்டி இன்று மதியம் தனது வீட்டில் உயிரிழந்தார். இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையம் கிராமம் ஆகும். இவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த விவசாயி உள்ளிட்ட படங்கள் முதல் சிவாஜிகணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய், விஷால், உதயநிதி ஸ்டாலின் நகைச்சுவை நடிகர் வடிவேலு, மறைந்த நடிகர் விவேக் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவரின் மறைவு சினிமாத்துறையினர் மத்தியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Updated On: 29 April 2022 5:21 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?