போலீசார் மீது புகார்: யாரிடம் கொடுக்க வேண்டும் என தெரியுமா?

போலீசார் மீது புகார் இருந்தால் அதனை யாரிடம் கொடுக்க வேண்டும் என தெரியவேண்டுமா? தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
போலீசார் மீது புகார்: யாரிடம் கொடுக்க வேண்டும் என தெரியுமா?
X

தமிழகத்தில் போலீசார் மீதான புகார்களை தெரிவிப்பதற்காக காவலர் புகார் தெரிவிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

'காவல்துறை உங்கள் நண்பன்' என போலீசார் தரப்பில் கூறப்படுவது உண்டு. காவல்துறையினர் உண்மையில் பொதுமக்களுக்கு நண்பர்கள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. போலீசார் இல்லை என்றால் நாட்டில் பெரும்பாலானவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது. வாகன பெருக்கம் அதிகரித்து வருவதால் போலீசார் இல்லை என்றால் போக்குவரத்தை கூட கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டு விடும். இப்படி நமக்கு பாதுகாப்பு அரணாக இருந்து வரும் போலீசார் சில நேரங்களில் பல்வேறு புகார்களுக்கு ஆளாகி விடுவது உண்டு.

ஏனென்றால் அவர்களும் மனிதர்கள் தான். சமுதாயத்தில் அவர்களும் ஒரு அங்கம் தான். அவர்களுக்கும் மனைவி, மக்கள் குடும்பம் என எல்லாம் உண்டு. ஆனால் தமிழக மக்கள் தொகை ஆறரை கோடியாக இருக்கும்போது அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களால் பாதுகாப்பு வழங்க முடியாது. ஆறரை கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகத்தில் போலீசாரின் எண்ணிக்கை என்பது சுமார் ஒரு 11/4 லட்சம் தான். ஆதலால் எல்லோருக்கும் அவர்களால் பாதுகாப்பு வழங்க முடியாத ஒரு சூழல் உள்ளது.


அது மட்டுமல்ல பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் போலீசார் 24 மணி நேரமும் பணி செய்யக்கூடிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்கள் நேரம் காலம் பார்ப்பது இல்லை. தங்களது மனைவி மக்கள் குடும்பம் இவர்களை விட்டுவிட்டு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் தான் அவர்களது நேரம் அதிகம் செலவிடப்படுகிறது. இதன் காரணமாக போலீசார் மன அழுத்தத்திற்கு ஆளாவது உண்டு. உறக்கமில்லாமல் இரவு பணி பார்ப்பதன் காரணமாக அவர்களுக்கு பல்வேறு நோய்களுக்கும் ஆளாகிறார்கள். இதனால் அவர்கள் அவ்வப்போது மன அழுத்தத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் என ஏதாவது செய்து விடுவது உண்டு. அந்த வகையில் பெரும்பாலான போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும்போது ஒரு சில காவலர்கள் செய்யும் தவறுகள் ஒட்டுமொத்த போலீஸ் சமுதாயத்திற்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுவது உண்டு. இதற்கு பல சம்பவங்களை உதாரணமாக கூறலாம்.

சித்தரிக்கப்பட்ட படம்

இப்படி போலீசார் மற்றும் போலீஸ் அதிகாரிகளை பற்றி புகார் தெரிவிப்பதற்காக தமிழக அரசு போலீஸ் புகார் தெரிவிக்கும் ஆணையம் (ஸ்டேட் போலீஸ் கம்ப்ளெய்ண்ட் அத்தாரிட்டி) என ஒரு அமைப்பை கடந்த டிசம்பர் மாதம் அமைத்தது. இந்த ஆணையத்தில் பெரும்பாலும் போலீஸ் அதிகாரிகளே உறுப்பினர்களாக இருந்தார்கள். அவர்களிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு பல எதிர்ப்புகள் வந்தன. என்ன இருந்தாலும் ஒரு போலீஸ் அதிகாரி மீது அல்லது ஒரு காவலர் மீது புகார் கொடுத்தால் அதை விசாரிக்கும் உயர் அதிகாரியானவர் அவர்களுக்கு சாதகமாகத்தான் நடந்து கொள்வார் அதனால் பொது மக்களின் புகார் நியாயமான முறையில் விசாரிக்கப்பட வாய்ப்பு இல்லை என கூறியிருந்தார்கள். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக வழக்குகள் தாக்கல் ஆகின.

இதனை தொடர்ந்து தற்போது இந்த ஆணையத்தின் அதிகார வரம்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரண கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரையிலான போலீசார் மீது புகார்கள் எதுவும் இருந்தால் அதனை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். அவர்கள் அந்த மனு மீது விசாரணை நடத்தி தீர்வு காண்பார்கள். துணை போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்திலிருந்து உயர் போலீஸ் அதிகாரிகள் வரை மீதான புகார்களை தமிழக அரசின் உள்துறை செயலாளரிடம் தெரிவிக்க வேண்டும். அவர்கள் அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு அளிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 2023-01-25T10:24:57+05:30

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  ஆதிதிராவிடர்களுக்கான மேம்பாட்டு பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற முதல்வர்...
 2. சினிமா
  ரிவியூ சொன்ன குழந்தை...கூலாக பதிலளித்த ஷாருக்கான்
 3. உலகம்
  அடுத்த ஆண்டு இந்தியா வர போப் பிரான்சிஸ் திட்டம்
 4. சினிமா
  நீலம் புரொடக்சன் தயாரிப்பில் புதிய படம் அறிவிப்பு
 5. இந்தியா
  பெங்களூருவில் இந்தியா எரிசக்தி வாரத்தை தொடங்கி வைத்த பிரதமர்
 6. சினிமா
  300 கோடி ரூபாய் வசூலை அள்ளிய வாரிசு: படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 7. தமிழ்நாடு
  அதிமுக வேட்பாளருக்கான 'ஏ' , 'பி' படிவங்களில் கையெழுத்திட...
 8. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட...
 9. தமிழ்நாடு
  நிமிர்ந்தார் எடப்பாடி- குனிந்தார் பன்னீர்- 'கை'க்கு போட்டி இரட்டை இலை
 10. டாக்டர் சார்
  சைவ உணவுகளில் நமக்கு போதுமான சத்துகள் கிடைக்கிறதா?.....படிச்சு...