/* */

ஈரோடு மஞ்சளில் என்ன மருத்துவ குணம் இருக்கி்றது என்பது பற்றி தெரியுமா?

ஈரோடு மஞ்சளில் என்ன மருத்துவ குணம் இருக்கி்றது என்பது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

HIGHLIGHTS

ஈரோடு மஞ்சளில் என்ன மருத்துவ குணம் இருக்கி்றது என்பது பற்றி தெரியுமா?
X

ஈரோட்டில் உள்ள ஒரு மஞ்சள் மண்டி.

மஞ்சள் மங்களரமான ஒரு பொருள் ஆகும். மஞ்சள் இல்லமல் எந்த ஒரு திருமணமும் நடந்தேறாது. மஞ்ச கயிறு... தாலி மஞ்சள் கயிறு என்ற பாடலில் இருந்தே திருமணத்தில் மஞ்சள் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என தெரியவரும். திருமணம் மட்டும் இன்றி பூப்பு எய்திய பெண் குழந்தைகளுக்கு நீராட்டும் நிகழ்ச்சிக்கு மஞ்சள் நீராட்டு என பெயர் உண்டு. எந்த ஒரு மங்களகரமான நிகழ்ச்சியின் தொடக்கத்திலும் மஞ்சள் இல்லாமல் எதுவும் நடத்தப்படமாட்டாது என்பது தமிழர்களின் பாரம்பரியமாக உள்ளது.

அது மட்டும் அல்ல. மஞ்சள் சிறந்த உணவு பொருள் என்ற வகையில் நமது வீட்டு சமையல் அறையை அலங்கரிப்பதோடு சிறந்த கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா எனும் கொடியே நாய் உலகையே அச்சுறுத்திக்கொண்டிருந்த கால கட்டத்தில் மஞ்சள் தூளை வெந்நீரில் கலந்து உப்பும் சேர்த்து வாய் கொப்பளிக்கவேண்டும் என மருத்துவர்களாலேயே பரிந்துரை செய்யப்பட்டது.

இத்தகைய சிறப்புக்குரிய மஞ்சள் தமிழகத்தில் அதிக அளவில் ஈரோடு மாவட்டத்தில் தான் விளைகிறது. ஈரோடு மஞ்சளில் அதிக மருத்துவ குணம் கொண்ட குர்க்குமின் உள்ளது. மற்றும் சுவைக்குப் பெயர் பெற்றது ஆகும். இது உலக சுகாதார அமைப்பினால்அங்கீகரிக்கப்பட்ட இயற்கையான உணவு வண்ணப் பொருளாகும். ஈரோடு மஞ்சளில் 90 சதவீதம் குர்க்குமின் உள்ளது.

மஞ்சளின் இரண்டு முக்கிய இரகங்களான சின்ன நாடன் (உள்ளூர் சிறிய ரகம்) மற்றும் பெரும் நாடன் (உள்ளூர் பெரிய ரகம்) உள்ளன. ஈரோட்டில் சின்ன நாடன் அதிகம் விளைகிறது. சிவகிரி, கொடுமுடி, பவானி, கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், சென்னம்பட்டி மற்றும் தாளவாடி போன்ற பகுதிகளில் இது முக்கியமாக விளைகிறது.மேலும், ஈரோடு பகுதியில் விரல் வகை (விராலி மஞ்சள்) மற்றும் கிழங்கு ரகம் (கிழங்கு மஞ்சள்) ஆகிய மஞ்சள் ரகங்களும் உற்பத்தியாகிறது.

மஞ்சள் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள ஈரோடு மஞ்சளின் மிகப்பெரிய சந்தையாகவும் உள்ளது. தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்பட்ட போது ஒரு லட்சம் ஏக்கரில் ஈரோட்டில் மட்டும் மஞ்சள் சாகுபடி இருந்தது. ஆனால், தற்போது ஈரோட்டில் மட்டும் 15,000 ஏக்கராக உள்ள நிலையில், மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி 50,000 ஏக்கராகக் குறைந்துவிட்டது.

2021 ஜனவரி மாதத்தில் ஈரோட்டிலிருந்து வங்காளதேசம் போன்ற பல்வேறு நாடுகளுக்கு சுமார் 18,000 டன் மஞ்சள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் ஈரோடு மஞ்சளுக்கு அதிக தேவை உள்ளது. ஈரோட்டில் நான்கு வெவ்வேறு இடங்களில் மஞ்சள் சந்தைகள் செயல்படுகின்றன.

ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் சேமிப்பு கிடங்கு உரிமையாளர்கள் சங்கத்தால் செம்மாம்பாளையத்தில் நடத்தப்படும் மஞ்சள் சந்தை வளாகம். ஈரோடு ஒழுங்குமுறை சந்தை மூலம் ஏலம் விடப்படுகிறது.

பெருந்துறையில் ஈரோடு மஞ்சள் சந்தை வளாகம். ஈரோடு ஒழுங்குமுறை சந்தைக் குழுவால் நடத்தப்படுகிறது. ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் நடத்தப்படும் மஞ்சள் சந்தை வளாகம் கருங்கல்பாளையத்தில் உள்ளது. ஈரோடு மணிக்கூண்டு அருகே மஞ்சள் சந்தை கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தால் நடத்தப்படுகிறது.

ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் சங்கம் தமிழக அரசின் மூலம் ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கோரி விண்ணப்பித்தது. எட்டு ஆண்டுகள் கழித்து கடந்த 2019ம் ஆண்டு பெறப்பட்டு உள்ளதும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Updated On: 5 Dec 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!