/* */

தேர்தலில் தி.மு.க.விற்கு தோல்வி உறுதி: பா.ஜ. துணை தலைவர் கரு. நாகராஜன்

தேர்தலில் தி.மு.க.விற்கு தோல்வி உறுதி என பா.ஜ. க. துணை தலைவர் கரு. நாகராஜன் ஆரூடம் கூறி உள்ளார்.

HIGHLIGHTS

தேர்தலில் தி.மு.க.விற்கு தோல்வி உறுதி: பா.ஜ. துணை தலைவர் கரு. நாகராஜன்
X

பா.ஜ.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் பேசினார்.

ஆவின் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. தலைவரை சந்தித்து கேட்டால் நிறைய ஐடியா கொடுப்பார் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் கூறினார்.

சென்னை கிழக்கு மாவட்டம், மடிப்பாக்கம் உள்ளகரம் பகுதியில், மடிப்பாக்கம் மண்டல் தலைவர் நெடுமாறன் தலைமையில், பா.ஜ.க. சார்பில் பால் விலை, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஆகியவற்றை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க.மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் கலந்து கொண்டு தி.மு.க. அரசின் குறைகளை சுட்டிக்காட்டி பா.ஜ.க.வினரிடயே பேசினார். உடன் பா.ஜ.க. மூத்த நிர்வா்கி மடிப்பாக்கம் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சொத்து வரி, மின் கட்டண உயர்வு, ஆவின் பால் விலை உயர்வு ஆகியவற்றை உயர்த்திய தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இறுதியாக செய்தியாளர்களை பா.ஜ.க. மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

ஆவின் நிர்வாகத்தை எப்படி நடத்த வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை சந்தித்து கேட்டால் நிறைய ஐடியா கொடுப்பார். ஏனென்றால் ஆவின் மிக்ஸ் தயாரிக்க சொல்லி கொடுத்து இப்போது அதனை தயாரிக்கிற நிலை ஏற்பட்டு இருப்பது எங்களது தலைவர் அண்ணாமலையால் தான். ஆவின் நிர்வாகம் தான் தயாரிக்கும் ஸ்வீட்களை அரசு ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் கொடுப்பதற்கு தயாராக வேண்டும். ஏன் வெளியில் போய் டெண்டர் போட்டு கொடுக்க வேண்டும் என்று கேட்ட பின்னர் தான் தமிழக அரசுக்கே தயாரித்து கொடுக்க வேண்டும் என எண்ணம் வந்தது.

பால் விலைய 12 ரூபாய் உயர்த்தியதற்கு பதிலாக அண்ணாமலையிடம் கேட்டால் எப்படி லாபம் பார்ப்பது என்பதை சொல்லி கொடுத்திருப்பார். எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. தோல்வியை சந்திக்க போவது உறுதி. கால்பந்து வீராங்கனை பிரியா கால் நீக்கப்பட்டு அதனால் உயிரிழந்து இருக்கிறார். இன்றைக்கு அமைச்சர் ரொம்ப கூலாக பேட்டி கொடுக்கிறார் இரண்டு டாக்டர்கள் தவறு செய்து விட்டார்கள் அவர்கள் கவன குறைவு தான் உயிரிழப்பு காரணம் என்று சொல்கிறார். இது எவ்வளவு பெரிய அநியாயம் அப்பெண்ணின் கனவு என்ன, குடும்பத்தின் கனவு எப்படிப்பட்ட கனவாக இருந்திருக்கும், அவர் எவ்வளவு பெரிய வீராங்கனையாக வந்திருப்பார். உயிரிழப்பிற்கு காரணம் நாங்கள் சொல்லவில்லை, மாநில அமைச்சர் சொல்கிறார். இது தான் திராவிட மாடல் அரசா என கேள்வி எழுப்பினார். தி.மு.க. அரசு ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு கரு நாகராஜன் கூறினார்.

Updated On: 15 Nov 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  7. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  8. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா
  10. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்