/* */

அ.தி.மு.க.வை புரட்டிப்போட்ட தீர்ப்பு- யார் இந்த நீதிபதி ஜெயச்சந்திரன்

ADMK News Tamil - அ.தி.மு.க.வை புரட்டிப்போட்ட தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

ADMK News Tamil | Court Judge
X

நீதிபதி ஜெயச்சந்திரன்.

ADMK News Tamil - அ.தி.மு.க. கட்சி.தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் நேற்று அளித்த தீர்ப்பு மிக முக்கியவத்தும் வாய்ந்த தீர்ப்பாக கருதப்படுகிறது.

தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வேலூரில் பிறந்தவர்.சென்னை சட்டக்கல்லூரியில் 1983 ஆம் ஆண்டு சட்டம் படித்த இவர், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் எம்.எல். படித்தார். போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆய்வுப்படிப்பை முடித்து இருக்கிறார் ஜெயச்சந்திரன். 1988 ஆம் ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த இவர், பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார். கடந்த 1998 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் வழக்கறிஞராக இவர் பதவியேற்றார். சி.ஐ.எஸ்.எப், பி.எஸ்.என்.எல், சுங்கத்துறை போன்ற மத்திய அரசின் துறைகளுக்காக ஆஜராகி வாதாடியவர் ஜெயச்சந்திரன். சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணிபுரிந்து இருக்கிறார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் முதன்மை கூடுதல் நீதிபதியாகவும், சி.பி.ஐ. சிறப்பு நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு நீதித்துறை அகாடமியின் இயக்குநராகவும், போதைப்பொருள் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதியாகவும், திருவள்ளூர், சென்னை மாவட்ட சிறப்பு நீதிபதியாகவும், 2011 முதல் 2015 வரை தமிழ்நாடு அரசின் சட்டத்துறை செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதியாக பொறுப்பேற்றார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 Aug 2022 9:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!