/* */

தமிழக காவல் துறை கதாநாயகன் வால்டர் தேவாரம் பற்றிய தொடர்..! பகுதி-1

தமிழக காவல் துறையில் சிறப்பாக பணிபுரிந்த வால்டர் தேவாரம் குறித்த சிறப்பு பார்வையை இத்தொடரில் காணலாம்.

HIGHLIGHTS

தமிழக காவல் துறை கதாநாயகன் வால்டர் தேவாரம் பற்றிய தொடர்..!  பகுதி-1
X

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் பிரிட்டீஷாரால் துவங்கப்பட்டது தமிழ்நாடு போலீஸ் எனப்படும் தமிழக காவல்துறை. தமிழக காவல்துறை இங்கிலாந்து நாட்டின் ஸ்காட்லாந்து யார்ட் போலீசுக்கு இணையான காவல்துறை என்ற பெருமையும் உண்டு. இதற்கு காரணம் தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பாடு தான். துப்பு துலக்குவதிலும் சரி, கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் துரிதமாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதிலும் சரி, கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதிலும் சரி, தீவிரவாதிகளை என்கவுண்டர் செய்வதிலும் சரி, தமிழக காவல்துறைக்கு நிகர் தமிழக காவல்துறை தான்.



வால்டர் தேவாரம்

இத்தகைய பெருமைக்குரிய தமிழக காவல்துறையில் உயர் பதவிகளில் இதுவரை எத்தனையோ அதிகாரிகள் அலங்கரித்துள்ளனர்.

அவர்களில் ஒரு சிலர் மட்டுமே இன்றளவும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் தனி சிறப்பு உண்டு. தமிழக காவல்துறை தலைவராக ஐ.ஜி. அருள் என ஒரு அதிகாரி இருந்தார். அவருடைய சிறப்பான பணிகள்,சேவைகள் பற்றி இப்பொழுதும் காவல்துறை வட்டாரத்தில் புகழ்ந்து பேசப்படுவது உண்டு. அந்த பட்டியலில் ஒருவராக இடம் பெற்று இருப்பவர் வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ்.

வால்டர் தேவாரம் ஐ.பி.எஸ். தமிழக காவல்துறையில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக தனது பதிவு பணியை தொடங்கி காவல்துறை இயக்குனர் என சொல்லப்படும் காவல்துறை தலைவர் அதாவது டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்

வால்டர் தேவாரம் என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது முறுக்கேறிய தொப்பை இல்லாத வைரம் போன்ற உடல், நிமிர்ந்த நடை ,நேர் கொண்ட பார்வை, முறுக்கு மீசை இதுதான் அவரது தோற்றப் பொலிவு. தேவாரம் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் சமூக விரோதிகளுக்கும்,ரவுடிகளுக்கும் கிலி ஏற்பட்டு விடும். அதற்கு காரணம் அவர் தனது பணிக்காலத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக வலம் வந்ததுதான். கலவரத்தை அடக்க தேவாரம் வந்தால் அந்த இடத்தில் நிச்சயம் துப்பாக்கி சூடு நடக்கும் என்று கூட ஒரு ஒரு காலத்தில் பேசப்பட்டது உண்டு.

தமிழக காவல்துறையில் 35 ஆண்டு காலம் பணியாற்றி விட்டு சென்னையில் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார் வால்டர் தேவாரம்.ஓய்வு பெற்ற பின்னரும் அவர் தடகள பயிற்சிகள் அளித்து வருகிறார். தமிழக தடகள பயிற்சியாளர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

எத்தனை பெருமைகள்

வால்டர் தேவாரம் தனது பதவி காலத்தில் நக்சலைட்டுகளை வேட்டையாடி இருக்கிறார். சந்தனக் கட்டை கடத்தல் காரன் வீரப்பனை அவர் பிடிக்கவில்லை என்றாலும் வீரப்பனின் கூட்டாளிகள் பலரை என்கவுன்டர் செய்து வீரப்பனின் பலத்தை குறைத்து இருக்கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அன்று இருந்த நில உடமையாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் இடையேயான பிரச்சினையை தீர்த்து வைத்திருக்கிறார், விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கைது செய்து இருக்கிறார் என அவருக்கு நிறைய பெருமைகள் உள்ளன.

காவல் துறை கதாநாயகன்

நடிப்பு என்றால் எப்படி நடிகர் திலகம் சிவாஜி நினைவுக்கு வருவாரோ அதேபோல காவல்துறை என்றால் டக் என்று அனைவரது முன்பும் கதாநாயகன் போல் தோன்றுபவர் வால்டர் தேவாரம். உருவத்தில் மட்டும் அல்ல செயலிலும் அவர் கதாநாயகனாக இருந்ததால் தான் தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு லெஜன்ட் ஆக உள்ளார். அதனால்தான் அவரை தமிழக காவல்துறை கதாநாயகன் என்று கூறுவது உண்டு.

வால்டர் வெற்றிவேல் திரைப்படம்

நடிகர் சத்யராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு நடித்து வெளியான திரைப்படம் வால்டர் வெற்றிவேல். இந்த திரைப்படம் வால்டர் தேவாரத்தின் காவல்துறை பணியின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு படமாகும். இந்த படத்திற்கு முதலில் வால்டர் தேவாரம் என்று தான் பெயர் சூட்டியிருந்தார்கள். ஆனால் அதற்கு வால்டர் தேவாரம் உடன்படாததால் பின்னர் வால்டர் வெற்றிவேல் என மாற்றியமைத்தனர்.


80 வயதை தாண்டி...

வால்டர் தேவாரத்தை சமீபத்தில் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.யாக (சிலை கடத்தல் தடுப்பு பிரிவு)பதவி வகித்து வரும் ஜெயந்த் முரளி ஐ.பி.எஸ். பேட்டி எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் அவரது பள்ளி வாழ்க்கை, கல்லூரி வாழ்க்கை, இந்திய ராணுவப் பணி, அதன்பின்னர் காவல்துறைப் பணி ஆகியவற்றில் அவரது வீரம், விவேகம், சேவை, நேர்மை, எளிமை பற்றி எல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்ப அவற்றிற்கு 80 வயதை தாண்டிய பின்னரும் எந்தவித தடுமாற்றமும் இன்றி தெளிவாக பதில் அளித்துள்ளார் வால்டர் தேவாரம்.


இன்ஸ்டா நியூசில் தொடர்

தமிழக காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் இன்னமும் நான் தேவாரத்துடன் பணியாற்றியவன், அவருடன் நக்சல் ஒழிப்பு சிறப்பு குழுவில் பணியாற்றியவன், வீரப்பன் வேட்டை டாஸ்க் போர்ஸ் படை பிரிவில் நானும் இருந்தவன் என பெருமை பேசிக் கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். வால்டரை போல் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என அவரை ரோல் மாடலாக ஏற்றுக் கொண்டு கடும் பயிற்சி மற்றும் முயற்சி எடுத்து காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பி .என பல அதிகாரிகளும் இன்னும் சொல்லப்போனால் ஐ.பி.எஸ் .அதிகாரிகளும் இருக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்லாமல் ஒரு நல்ல திறமையான போலீஸ் அதிகாரியான வால்டர் தேவாரம் பற்றி அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்வதற்காக அவரை ஒரு ரோல் மாடலாக ஏற்று வாழ்வதற்காக 'இன்ஸ்டா நியூஸ்' இணைய செய்தி தளம் அவர் பற்றிய ஒரு தொடரை இன்று முதல் வெளியிட இருக்கிறது.

அதில் அவரது இளமைக் காலம் முதல் தற்போதைய நிலை வரை அவரது சாதனைகள் தொடர்ந்து இடம்பெறும்.

வால்டர் தேவாரத்தின் முழுப் பெயர் வால்டர் ஐசக் தேவாரம் என்பதாகும். இதனை சுருக்கி டபிள்யூ. ஐ. தேவாரம் என்று காவல்துறை பதிவேடுகளில் உள்ளது.

மூணாறில் பிறந்தார்

வால்டர் தேவாரம் பிறந்தது இன்றைய கேரள மாநிலத்தின் ஒரு பகுதியான மூணாறு ஆகும். மூணாறு, தேவிகுளம், பீர்மேடு ஆகிய பகுதிகளில் தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அந்த வகையில் அவர் கேரள மாநிலத்தில் பிறந்திருந்தாலும் பச்சை தமிழர் ஆவார். அப்படி இயற்கை எழில் கொஞ்சும் தேயிலை எஸ்டேட்டில் பிறந்தவர்தான் வால்டர் தேவாரம். அவரது தந்தை மற்றும் தாத்தா ஆகியோர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

இவருடைய பள்ளி வாழ்க்கை முழுவதும் மூணாறில் தான். தினமும் 18 கிலோமீட்டர் நடந்து பள்ளிக்கூடம் சென்று வந்திருக்கிறார். பள்ளிக்கூடம் செல்லும் போது யானை, புலி, சிங்கம் மற்றும் கரடு முரடான காட்டு விலங்குகள் ஆகியவற்றை பார்த்திருக்கிறார்.

இயற்கையோடு வாழ்க்கை

இயற்கை சூழ்ந்த மூணாறு மலைப்பகுதியில் இயற்கையுடன் அவருடைய இளமைக்கால பருவம் தொடங்கி இருக்கிறது. தாத்தா, தந்தையை போலவே ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை. இந்த விருப்பத்தை தனது தந்தையிடம் தெரிவிக்க அவர் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். அதற்காக பள்ளிப்படிப்பு முடிந்ததும் இந்திய ராணுவத்தில் சேருவதற்காக என்.டி.ஏ. எனப்படும் இந்தியன் டிஃபன்ஸ் அகாடமி தேர்வு எழுதினார். அதில் தேர்ச்சி பெற்று இந்திய ராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார். ராணுவத்தில் அவருடைய பணி எப்படி இருந்தது ?எத்தனை ஆண்டு காலம் ராணுவத்தில் பணியாற்றினார் ராணுவ பணி நீடித்ததா என்பது பற்றி நாளை தெரிந்து கொள்ளலாம். ( இன்னும் வரும்)

Updated On: 21 Nov 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...