/* */

மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்

தஞ்சை மேயர் தனது அங்கியுடன் சென்று தன்னை விட இளையவரான உதயநிதியின் காலில் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

HIGHLIGHTS

மேயர் அங்கியுடன் உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்
X

உதயநிதி காலில் விழும் தஞ்சாவூர் மேயர்

காலில் விழும் கலாச்சாரம் அதிமுகவில் தான் உண்டு. திமுகவில் காலில் விழும் கலாசாரம் கிடையாது என பெருமை பேசி வந்தனர். ஆனால் திமுகவிலும் தற்போது காலில் விழும் கலாச்சாரம் ஆரம்பித்து விட்டது.

தாம்பரம் மாநகராட்சியின் முதல் மேயராக பதவியேற்ற வசந்தகுமாரியை அமைச்சர் அன்பரசன் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு எம்.எல்.ஏ ஒருவர் வற்புறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

வேலூர் மாநகராட்சியின் முதல் மேயராக சுஜாதா ஆனந்தகுமார் பதவி ஏற்ற சமயத்தில் அமைச்சரும் தனது தந்தையுமான துரைமுருகன் காலில் விழுந்து ஆசி வாங்குமாறு வேலுர் எம்பி கதிர் ஆனந்த் சிக்னல் கொடுத்தது நினைவிருக்கலாம்.

தஞ்சாவூரில் மத்திய மாவட்ட திமுக சார்பில், முப்பெரும் விழா கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கும்பகோணத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற பின்னர் தஞ்சை விழாவில் பங்கேற்க எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் வந்தார். முதல்வருக்கு எப்படி வரவேற்பு அளிப்பார்களோ அந்தளவிற்கு உதயநிதிக்கும் வரவேற்பு இருந்தது. கூடியிருந்த கட்சி தொண்டர்கள் மத்தியில் உதயநிதி வந்த கார் மிதந்து வந்தது. விழா நடக்கும் கலைஞர் அறிவாலயத்திற்கு அருகே கார் வந்து நின்றது.

காரில் இருந்து உதயநிதி இறங்குவதற்குள் கூட்டத்தினர் மத்தியில் புகுந்து வந்தார் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மேயருக்கான அங்கி அணிந்து டவாலியுடன் வந்த அவர் காரை விட்டு இறங்கி உதயநிதியை கண்டவுடன் பட்டென்று அவர் காலில் விழுந்து வணங்கினார்.

தஞ்சை மாநகராட்சியின் மேயர் என்ற பெருமையுடன் அதற்குரிய அங்கியை அணிந்தபடி உதயநிதி ஸ்டாலின் காலில் அவர் விழுந்து வணங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமல்ல, மேயர் ராமநாதன், தன்னை விட ஒரு வயது இளையவரான உதயநிதி காலில் விழுந்தது மேலும் அதிர்ச்சியை தருகிறது.

மாநகராட்சி மேயர் என்பவர் அந்த மாநகரத்தின் முதல் குடிமகனாக கருதப்படுபவர். அதோடு, நீதிபதிகள், கலெக்டர்களுக்கு எப்படி டவாலி இருக்கிறார்களோ, அதேபோல, மேயருக்கும் டவாலி உண்டு. ஆகவே, அமைச்சர்களாக இருந்தாலும் சரி, எம்.எல்.ஏ.க்களாக இருந்தாலும் சரி, மேயருக்கு கீழேதான். அப்படிப்பட்ட மேயர் பதவியின் புனித தன்மை சீரழிந்து வருகிறது என்பதே கசப்பான உண்மை.

Updated On: 28 Jun 2022 1:42 PM GMT

Related News