/* */

காலி மதுபாட்டில் ரிட்டர்ன் பெறும் முறை: தமிழகம் முழுவதும் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!

டாஸ்மாக் மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

HIGHLIGHTS

காலி மதுபாட்டில் ரிட்டர்ன் பெறும் முறை: தமிழகம் முழுவதும் அமல்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு..!
X

எப்போதும் குடிமகன்களால் நிரம்பி வழியும் தமிழக டாஸ்மாக் கடைகள் (கோப்பு படம்).

தமிழகத்தில் கொடைக்கானல், நீலகிரி உள்ளிட்ட மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள், குறிப்பாக குடிமகன்கள் காலி மதுபாட்டில்களை வனப்பகுதிகளில் வீசி செல்வது வழக்கமாக உள்ளது. இந்த பாட்டிகள் வீசி எறிவதால் கண்ணாடி துகள்களாக உடைந்து வன உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின.

இதையடுத்து, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பிரதேசங்களில் மட்டும், டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யும் மது பாட்டில்களில், 'ஈசி 10' என்னும் ஸ்டிக்கர் ஒட்டி 10 ரூபாய் கூடுதலாக விற்பனை செய்யும் நடைமுறை அமலானது. இந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட காலி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளில் திரும்ப கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, நீலகிரியை தொடர்ந்து மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் எனவும், இந்த திட்டத்தை வடிவமைத்து, ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், பாட்டில்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக விழப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் வெளியிட வேண்டும் எனவும், சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Jun 2022 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!