/* */

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது..

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது..
X

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை கடந்தது.....

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று மாவட்டத்தில் புதியதாக 597 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 004ஆக உயர்ந்துள்ளது.

மேலும் சிகிச்சை பலனலிக்காமல் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 396ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இன்று முதல் பலசரக்கு, மளிகைப் பொருட்களும் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய அனுமதியளித்துள்ளது. மாவட்டத்தின் நகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஓரளவு தடையில்லாமல் கிடைத்து வருகிறது.

புறநகர் பகுதிகள், கிராமப் பகுதிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் சற்று சிரமம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப்பகுதி மக்கள் வெளியில் வரவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப் பகுதிகளுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி இருந்தால் தான் கிராமப் பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை ஓரளவு குறைத்து, தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும். மேலும் கிராமப் பகுதிகளில் கண்காணிப்பு பணிகளிலும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், வரும் நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறையும் வாய்ப்புள்ளது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 31 May 2021 9:04 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!