/* */

மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மயிலாடுதுறை: விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
X

தி.மு.க. அரசை கண்டித்து மயிலாடுதுறையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காவிரி டெல்டா மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்காத தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செம்பனார் கோவில் ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனம், வி.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட வேண்டும், டாஸ்மாக் கடையை உடனே மூட வேண்டும், பொங்கல் தொகுப்புத் திட்டத்தை முறைகேட்டை கண்டித்தும், மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதில் பேரூராட்சி செயலாளர் கிருஷ்ணசாமி, பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன், எம்.ஜி.ஆர்.மன்ற மாவட்ட இணை செயலாளர் நடராஜன், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Updated On: 23 Jan 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!