/* */

அதகளம் பண்ணும் இந்திய விஞ்ஞானிகள்- அசுர பலம் பெறும் இந்திய முப்படைகள்

DRDO Latest News - அதகளம் பண்ணும் இந்திய விஞ்ஞானிகளால் அசுர பலம் பெறும் நிலையில் இந்திய முப்படைகள் உள்ளன.

HIGHLIGHTS

அதகளம் பண்ணும் இந்திய விஞ்ஞானிகள்-  அசுர பலம் பெறும் இந்திய முப்படைகள்
X

DRDO Latest News - DRDO மற்றும் இந்திய கடற்படை தொழில் நுட்ப வியலாளர்கள் இணைந்து ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் VL SRSAM ஒன்றை சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். இங்கு VL SRSAM என்பதன் விரிவாக்கம் வெர்டிக்கிள் லாஞ்ச் சார்ட் ரேஞ்ச் சர்பேஸ் டூ ஏர் மிஸைல் என்பதாகும்.

குறிப்பிட்ட இலக்கை மிக துல்லியமான முறையில் தாக்கி அழித்திருக்கிறார்கள். இதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்ப பண்புகள் தான் அலாதியானது. பைபர் ஆஃப்டிகல் கைரோஸ்கோப் உடன் இணைந்த இதன் உள்கட்டமைப்பு வசதிகளை கொண்டே LOAL மற்றும் LOBL ஆகியவற்றை செம்மையாக மேற்கொள்ள முடியும்.

இங்கு LOBL என்பது லுக் ஆன் பிஃபோர் லாக், LOAL என்பது லுக் ஆன் ஆஃப்டர் லாக் என்கிற விரிவாக்க சுருக்கம் ஆகும். இது செயல்படும் தூர வீச்சு கிட்டதட்ட 50 கிலோமீட்டர் தூரம். இந்த முழு செயல்பாடுகளையும் முழுமையாக கண்காணிக்க மற்றும் மாற்றியமைக்க முடியும் என்கிறார்கள். இந்த குறுகிய தூர வீச்சு கொண்ட இது, சாலிட் ப்ரோபலென்ட் இஞ்சினை கொண்டு அதிக வேகத்தில் அதாவது 4.5 மாக் வேகத்தில் இயங்கும் ஓர் சிறிய ஏவுகணை வகையை சார்ந்தது.

குறுகிய தூர வீச்சு கொண்ட அதிக வேகத்தில் இயங்கும் துல்லியமான தாக்குதல் திறன் நிரூபிக்கப்பட்ட ஒன்றாக இது உலக அளவில் முதல் இடத்தில் இருக்கிறது என்கிறார்கள். பாரத் டைனமிக்ஸ் நிறுவனம் இந்திய கடற்படைக்கு என்றே பிரத்தியேக நம் DRDO வுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அதனை வெற்றிகரமாக சோதனை செய்தும் பார்த்திருக்கிறார்கள்.

அடுத்ததாக ATAGS அட்வான்ஸ்டு டோவ்டு ஆர்ட்டிலரி கன் சிஸ்டம் என்பதன் சுருக்கம் தான் இந்த ATAGS. உலகின் முதல் இடத்தை பிடித்த நிரூபிக்கப்பட்ட துப்பாக்கி ரகம்.இதன் தூர வீச்சு 48 கிலோமீட்டர். நிமிடத்திற்கு ஐந்து குண்டுகள் வரை வெவ்வேறு இலக்குகளை குறி தவறாமல் சுடும் சக்தி கொண்டது. தானியங்கி முறையில் இயங்கக்கூடியது. எல்லா காலநிலையிலும் எல்லா நிலப்பரப்பிலும் இயங்கும் வல்லமை வாய்ந்ததாக ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு சுலபமாக கொண்டு செல்ல கூடியதாக 360° பாகை கோணத்தில் சுழலக்கூடியதாக இரண்டரை நிமிடத்தில் நிலை நிறுத்த கூடியதாக பல சிறப்பம்சங்களை கொண்டதாக இது விளங்குகிறது.

சாலை மார்க்கத்தில் ஒரு ட்ரக் போன்ற வாகனத்தில் இணைத்து எங்கு வேண்டுமானாலும் வெகு சுலபமாக இழுத்து சென்று விட முடியும். அதுபோலவே கரடுமுரடாக மலைப்பாங்கான பகுதிகளிலும் கூட வெகு சுலபமாக நிலை நிறுத்தி இயக்க முடியும். இதுவுமே 360° கோணத்தில் சூழலக்கூடியது.

அடுத்ததாக பினாகா பல்குழல் ராக்கெட் ஏவல் தான்.ஏற்கனவே நம் வசத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் இதனை மேலும் மேம்படுத்தி இருக்கிறார்கள். ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் வைத்து தற்போது சோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். நிமிடத்திற்கு 42 ஏவுகணைகளை 50 முதல் 72 கிலோமீட்டர் தூர வீச்சில் வெவ்வேறான இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாக மாற்றீடு செய்து வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.

ஆளில்லா உளவு விமானம் முதல் தாக்குதல் ட்ரோன்கள் வரை வெகு சுலபமாக தட்டி தூக்க முடியும் இதனால் இவையெல்லாம் ஒருங்கிணைத்து பயன் படுத்த முடியும் என்பது தான் இதில் உள்ள கூடுதல் சிறப்பம்சங்கள்.

அடுத்ததாக வரும் செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி அன்று இந்திய கடற்படை வசம் முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட விமான தாங்கி கப்பலான விக்ராந்த்தை இணைக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இந்த விமான தாங்கி கப்பலின் மேல் தளத்தில் 30 விமானங்கள் நிறுத்தி வைக்க முடியும். தற்போதைக்கு இதில் ரஷ்ய தயாரிப்பு மிக் 29k மற்றும் இலகு ரக தேஜாஸ் விமானங்களை பயன்படுத்த இருக்கிறார்கள். இந்த கப்பலில் வைத்து இயக்க பலநிறுவன தயாரிப்பு ரகங்களுக்கு பலத்த போட்டி இருந்தபோதிலும் நம் இந்திய அரசு தரப்பில் தற்போதைக்கு நம் வசம் இருக்கும் விமானங்களையே பயன் படுத்த சொல்லி இருக்கிறார்கள். மொத்தத்தில் வலிமையான பாரதம் செயல்பாட்டிற்கு வந்து கொண்டிருக்கிறது என்பது மாத்திரம் நிச்சயம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 30 Aug 2022 9:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?