/* */

எண்ணெய் சருமத்திற்கு வீட்டிலேயே பேஸ் பேக்

Face Pack For Oily Skin in Tamil-வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம்.

HIGHLIGHTS

எண்ணெய் சருமத்திற்கு வீட்டிலேயே பேஸ் பேக்
X

பைல் படம்.

Face Pack For Oily Skin in Tamil-எண்ணெய் சருமம் கொண்டவர்கள்தான் அதிக அவஸ்தைகளை அனுபவிக்க நேரிடும். ஏனெனில் முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை சில நேரம் அடைத்துவிடும். இறுதியில் முகப்பரு பிரச்சினையை உண்டாக்கிவிடும். சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். எனவே வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள்:

தேவையான பொருட்கள்:

கடலை மாவு -1 கப்

பொடித்த மஞ்சள்: சிறிதளவு

பால்- சிறிதளவு

செய்முறை:

மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 26 March 2024 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  3. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  4. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...
  5. ஆன்மீகம்
    பேரருள் தருவாய் பெருமாளே..!
  6. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  7. வீடியோ
    ManmohanSingh-கை கண்டித்த Thuglak சோ !அப்ப என்ன நடந்தது ?#thuglak...
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: 11 அதிகாரிகள் மீது...
  9. வீடியோ
    விடாமல் பொளந்து கட்டும் Modi | மீள முடியாமல் விழிபிதுங்கும் Congress |...
  10. அரசியல்
    400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்