/* */

400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்

வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரத்தினால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400 இடம் கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

HIGHLIGHTS

400 இடங்கள் கிடைக்குமா? வடமாநிலங்களில் டல் அடிக்கும் பாஜக பிரச்சாரம்
X

பிரதமர் மோடி.

லோக்சபா தேர்தலில் கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் யாரும் பாஜகவின் இலக்கான 400 இடங்களை பெறுவதை பற்றி பேசாமல் தவிர்த்து வருகின்றனர். தேசிய அளவில் பாஜகவின் இந்த செயல் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

2024 லோக்சபா தேர்தல் தொடங்கும் முன் பாரதிய ஜனதா கட்சி 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்தது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வந்தனர்.

பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது. 370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.

ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம். பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.

கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.

இப்படிப்பட்ட நிலையில் 400 இடங்களை பெறுவோம் என்று பாஜக முழக்கம் வைக்க தொடங்கியது. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் போட்டது. அதாவது இந்த முறை 400 இடங்களில் வெல்வோம் என்று கோஷம் போட்டது. பாஜக கோஷம்: ஆனால் பாஜக இப்படி கோஷமிட்டது கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கி உள்ளது. 400 இடங்களை வெல்வோம் என்று அந்த கட்சியின் முழக்கம் முதல் கட்ட தேர்தலில் மிக பலமாக ஒழித்தது. ஆனால் இரண்டமாக கட்ட பிரச்சாரம் எதிலும்.. இன்று தொடங்கிய மூன்றாம் கட்ட பிரச்சாரத்திலும் அந்த சத்தம் கேட்கவே இல்லை.

உதாரணமாக மோடி கடைசியாக ராஜஸ்தானில் செய்த மூன்று பிரச்சாரத்திலும் 400 என்ற வார்த்தையை பயன்படுத்தவே இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்பதை மட்டுமே கூறினார். மாறாக இலக்கு 400 என்பதை அவர் எங்குமே குறிப்பிட்டு கருத்து தெரிவிக்கவில்லை. ஆப் கி பார்.. சார்சோ பார் என்று கோஷம் சமூக வலைதளங்களில் தவிர்க்கப்படுகிறது. பிரச்சாரத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கோஷம் தவிர்க்கப்படுகிறது. பாஜக ஏன் இலக்கு 400 பற்றி பேசுவதே இல்லை என்ற கேள்வி லேசாக எழும்ப தொடங்கி உள்ளது.

இதன் மூலம் வட மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சியின் பிரச்சாரம் டல் அடிக்க தொடங்கி இருப்பதை காண முடிகிறது.

Updated On: 26 April 2024 1:08 PM GMT

Related News