/* */

மின்விபத்து: இடது கையால் 'சுவிட்ச்' சை இயக்க கூடாது ஏன் தெரியுமா?

மின்விபத்தை தவிர்க்க இடது கையால் ‘சுவிட்ச்’ சை இயக்க கூடாது என ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

மின்விபத்து: இடது கையால் சுவிட்ச் சை இயக்க கூடாது ஏன் தெரியுமா?
X

தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் சுவாமிகள் குருபூஜையில் தேர் பவனி நடந்த போது சப்பரம் உயர் அழுத்தமின்பாதையில் சாய்ந்ததின் காரணமாக 11 பேர் உயிர் இழந்த சோகமான சம்பவம் நடந்து முடிந்துள்ளது.

கண் மூடி கண் திறப்பதற்குள் இறைவனால் படைக்கப்பட்ட அரிய உயிர்கள் விண்ணுலகம் சென்று விட்டன. விபத்திற்கான காரணம் பற்றி ஒரு நபர் கமிஷன் விசாரணை தமிழக அரசினால் அமைக்கப்பட்டு உள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில்வந்து ஆறுதல் கூறியதோடு, நிவாரண உதவியயையும் வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்.குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியும் தங்களது பங்கிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

இதுபோன்ற ஒரு விபத்து நடக்கும் போது அதுபற்றி ஓரிரு நாட்கள் விடாமல் பேசும் ஊடகங்களும், மக்களும் பின்னர் அதனை சில நாட்களில் மறந்தே போய்விடுவார்கள். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மட்டுமே ஆண்டுக்கணக்கில் சோகத்தை சுமக்க வேண்டிய சூழல் உள்ளது. எனவே இதுபோன்ற விபத்துக்களில் சிக்காமல் இருப்பதே நமது புத்திசாலித்தனமாகும்.

மின்சாரம் இல்லாமல் நாம் இந்த உலகில் வாழ முடியாது. அந்த அளவிற்கு அது நமது வாழ்வியலில் ஒரு அங்கமாகி விட்டது. அதே சமயத்தில் வீடானாலும் சரி, வெளி இடமானாலும் சரி மின்சாரத்தை முறையாக கையாளவில்லை என்றால் அதுவே நமக்கு எமனாக கூட மாறிவிடும். அதனால் தான் மின்சாரத்தை எதிரிக்கு எதிரி நண்பனுக்கு நண்பன் என மின்வாரிய வட்டாரத்தில் கூறுவது உண்டு.


இந்த நிலையில் மின் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்கு நாம் பொது வெளியிலும் வீட்டிலோ அல்லது அலுவலகத்தில் இருக்கும்பொழுதோ கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற மின்வாரிய உதவி பொறியாளர் ஜெ. திருஞானம் கூறி உள்ள அரிய ஆலோசனைகள் என்ன என்பதை பார்க்கலாமா?

அறுந்துகிடக்கும் மின்கம்பியை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. போதுமான Horizondal, vertical Clearance விடப்பட்டு கட்டிடங்கள் கட்டவேண்டும்.

வீட்டில், அலுவலகத்தில் எக்காரணம் கொண்டும் இடது கையினால் சுவிட்ச் ஆன் செய்யக்கூடாது.ஏன் என்றால் இடது கையால் சுவிட்ச் போடும்பொழுது எதிர்பாராமல் மின்சாரம் தாக்கினால் மின்சாரம் இடது கை வழியாக நமது இதயத்தை கடந்து நமது இடது காலின் வழியாக நிலத்தை அடைவதால். இதயம் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே எப்பொழுதும் வலது கையில் உள்ள விரலினால் ஈரம் இல்லாமல் Switch போட வேண்டும்.

நமது வீட்டில் உள்ள மின்சாரம் Low Voltage (LT) தாழ்வழுத்த மின்சாரம் ஆகும். Single phase என்றால் 230 Volt மற்றும் Three phase என்றால் 440 Volt மின்சாரம் இருக்கும். தாழ்வழுத்த மின்சாரத்தில் மின் விபத்து ஏற்பட்டால் , மின் விபத்து ஏற்பட்டவரை எக்காரணம் கொண்டும் அருகில் உள்ளவர்கள் தொடாமல், உடனடியாக மின்சாரத்தை துண்டித்து காய்ந்த மரக்கட்டையால் அவரை மின் பாதிப்பிலிருந்து தனிமைப்படுத்த வேண்டும். முதல் உதவி செய்யும்பொழுது எக் காரணம் கொண்டும் குடிக்க தண்ணீர் கொடுக்க கூடாது. காற்றோட்டத்துடன் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவேண்டும்.

உயர் அழுத்தமின்பாதை என்பது. 11KV , 22KV, 33KV ,110KV ,230KV ,400KV தற்பொழுது அதற்கும் கூடுதல் திறனுடன் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. உயர் அழுத்தமின்சாரம் அதன் திறனுக்கு தக்கவாறு குறிப்பிட்ட தூரம் செல்லும்பொழுதே நம்மை மின் அதிர்ச்சிக்கு உட்படுத்தி நம்மை தூக்கி எறிந்துவிடும் தன்மை கொண்டது. பெரும்பாலும் மின் அதிர்ச்சிக்கு உண்டான பாகங்கள் எரிந்துவிடும்.

தாழ்வழுத்த மின்சாரம் நம்மை தாக்கினால் ஒரு சில நிமிடங்களில் நம் உடம்பில் உள்ள நீர் சத்து முழுமையாக போய் இறப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அவசியம் நமது வீடுகளில் ELCP எனப்படும் Earth leakage circuit breaker வைப்பது நம்மை மின் விபத்துகளில் இருந்து காப்பாற்றும்.

வீடுகளில் உள்ள Grinder Machine க்கு என்று தனியாக Miniature circuit breaker(MCB) வைப்பது நல்லது. மேலும் வீட்டில் உள்ள Earth pipe மற்றும் அதில் இணைத்துள்ள காப்பர் கம்பியை முறையாக பராமரித்து வரவேண்டும்.

வெள்ளம் வரும் முன் அணை கட்டுவதே சாலச்சிறந்தது என்பதால் நாமும் மின் விபத்துக்களில் சிக்காமல் இருக்க இந்த பயனுள்ள ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிப்பது நல்லது.

Updated On: 28 April 2022 8:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...