/* */

பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்

பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் சிவனடியார்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில்   பங்கேற்ற சிவனடியார்கள்
X

பரமத்திவேலூர் அருகே பச்சைமலைப் பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் திரளான சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

பச்சைமலைப் பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் திரளான சிவனடியார்கள் கலந்துகொண்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகில் உள்ள. பொத்தனூர் கோப்பணம் பாளையம் மேற்கு வண்ணந்துறையில் உள்ள பச்சை மலைப் பகுதியில் உழவாரப்பணி நடைபெற்றது. ஈரோடு திருத்தொண்டீஸ்வரர் உழவாரப்பணி மற்றும் பரமத்தி வேலூர் ஏஎஸ்கே சிவனடியார்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பச்சை மலையினைச் சுற்றி பக்தர்கள் சிரமம் இல்லாமல் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக சிறப்பு உழவாரப்பணி மேற்கொண்டனர்.

காலை 6 மணிக்கு துவங்கிய உழவாரப்பணி மாலை 6 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இதில் ஈரோடு, திருச்செங்கோடு, கந்தம்பாளையம், பரமத்தி வேலூர், பொன்மலர் பாளையம், நன்செய் இடையாறு, மதுரை, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களில் இருந்து 150க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு உளவாரப்பணி செய்தனர். மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த முள் செடிகள் மற்றும் புதர்கள் வெட்டி அகற்றப்பட்டன. மேலும் கோயில் தீர்த்த கிணற்றினை சுத்தம் செய்து பக்தர்கள் வழிபாட்டிற்காக ஏற்பாடு செய்து கொடுத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஆலய நிர்வாகிகள் மற்றும் பரமத்திவேலூர் சிவனடியார்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Updated On: 5 May 2024 8:06 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!