/* */

ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!

பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

ப.வேலூரில் போலீசாருக்கு யோகா  மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
X

பரமத்திவேலூரில் போலீசாருக்கான சிறப்பு யோகா மற்றும் தியானப்பயிற்சி நடைபெற்றது.

ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்

நாமக்கல் :

பரமத்திவேலூர் உட்கோட்ட காவல்துறைக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூர் உட்கோட்ட சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார், ஏட்டுகள், எஸ்.ஐகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு யோகா மற்றும் தியான பயிற்சி முகாம் நடைபெற்றது. ப.வேலூர், ஜேடர்பாளையம், நல்லூர், பரமத்தி, வேலகவுண்டம்பட்டி, மற்றும் ப.வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் மற்றும் போக்குவரத்து போலீஸ் நிலையம் உட்பட 7 போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம் ப.வேலூர் தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டு வருவதாலும், அதிக பணிச்சுமை மற்றும் மன உளைச்சல் காரணமாக மனதளவிலும், உடலளவிலும் ஏற்படும் சோர்வை போக்கும் வகையில் நடைபெற்ற, இப்பயிற்சியினை ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும், யோகா பயிற்சியாளருமான நாமக்கல் ஆறுமுகம் முகாமில் கலந்துகொண்டு சிறப்பு பயிற்சி அளித்தார்.

Updated On: 5 May 2024 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!