/* */

கேரள மாபியாக்களின் பிடியில் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள்

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழகத்தில் இருந்த பல நுாறு கோடி மதிப்புள்ள சொத்துக்களையும் கேரளா கைப்பற்றி உள்ளது.

HIGHLIGHTS

கேரள மாபியாக்களின் பிடியில் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள்
X

பத்மநாபபுரம் அரண்மனை

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது கேரளா நுட்பமாக நடந்து கொண்டு கைப்பற்றிய தமிழக சொத்துக்களின் விவரங்களை காணலாம்.

  • 100 கோடி ரூபாய் மதிப்பிலான குமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை முதல்...
  • தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிக்கு அருகாமையில் அமைந்திருக்கும்,200 கோடி மதிப்பிலான கேரள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 64 ஏக்கர் நிலம்...
  • செங்கோட்டை அருகே உள்ள பெரிய பிள்ளை வலசை பஞ்சாயத்திற்கு உட்பட்ட,7 கோடி மதிப்பிலான கேரள வனத்துறைக்கு சொந்தமான 24 ஏக்கர் நிலம்...
  • தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூருக்கு மேற்கே செண்பகவல்லி கால்வாய்க்கு செல்லும் வழியில் அமைந்திருக்கும், கேரள வனத்துறைக்கு சொந்தமான 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலம்...

என கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் மதிப்பிலான கேரள அரசுக்கு சொந்தமான நிலங்கள் தமிழகத்தில் இருக்கிறது. இதன் தற்போதய சந்தை மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டும்.

ஆனால் தமிழக அரசுக்கோ, தமிழக வனத்துறைக்கோ சொந்தமான நிலங்கள், கேரளாவில் எங்காவது இருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ஏன் தமிழக அரசுக்கு கேரளாவில் சொத்துக்கள் இல்லாமல் போனது என்கிற கேள்வியை இதுவரை தமிழகத்தில் எழுப்பியதாகவும் தெரியவில்லை.

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையகமாக இருந்த இன்றைய குமரி மாவட்டத்திலுள்ள பத்மநாபபுரம் அரண்மனையை, தந்திரமாக கேரள அரசு கேட்டுப் பெற்றது போல, பாண்டிய மன்னனால் ஆட்சி செய்யப்பட்ட, இன்றைய கோட்டயம் மாவட்டத்தில் உள்ள, பூஞ்சார் சமஸ்தானத்தினுடைய தலைமையகம் அமைந்திருக்கும், ஈராட்டு பேட்டை அரண்மனையை, தமிழக அரசால் கேட்டுப் பெற்றிருக்க முடியும். ஆனால் செய்யவில்லை.

பூஞ்சார் சமஸ்தானத்தின் கீழ் இருந்த முண்டக்காயம், எருமேலி, நேரியமங்கலம், பாம்பனார், பீர்மேடு, வண்டிப்பெரியாறு, குமுளி, பூப்பாறை, தேவிகுளம், மறையூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தமிழக அரசு 1956 மொழிவாரி பிரிவினையின் போது எதையும் கேட்டு வலியுறுத்தவில்லை என்பது நமக்கான பின்னடைவு.


இன்றைக்கு தேவிகுளம் மற்றும் பீர்மேடு தாலுகாவில் 60 ஆயிரம் ஹெக்டேரில் பரந்து விரிந்து கிடக்கும் தேயிலைத் தோட்டத்தை அமைப்பதற்கு, பாண்டிய அரசன் தலைமை தாங்கிய பூஞ்சார் சமஸ்தானத்துடன் தான் ஆங்கிலேய வியாபாரியான மன்றோ ஒப்பந்தம் செய்துகொண்டாரே தவிர து திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் அல்ல

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைமையகமாக இருந்த பத்மநாபபுரம் அரண்மனை தமிழகத்தில் இருந்தாலும், அதனுடைய முழு கட்டுப்பாடும் கேரள மாநில அரசின் கையில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அதை காவல் காப்பவர்கள் கூட கேரள மாநில காவல்துறை தான்.

ஆனால் அத்தனை வாய்ப்பு இருந்தும் பாலக்காடு மாவட்டத்திலோ, இடுக்கி, கோட்டயம், பத்தனம் திட்டா, வயநாடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அன்றைய தமிழக அரசு எதையும் கோரவில்லை என்பது மிகப்பெரிய அபத்தம்.

தமிழகத்தில் கேரள மாநில அரசுக்கே இவ்வளவு சொத்துஎன்றால், கடந்த இருபது ஆண்டுகளில் மலையாள மாஃபியாக்கள் தமிழகத்தில் வாங்கி குவித்திருக்கும் சொத்தின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை தாண்டும்.

இது உங்களுக்கு மலைப்பாக தெரியலாம். அது தான் உண்மை.

கேரள எல்லையோர மாவட்டங்களில் தான் இவர்கள் சொத்துக்களை வாங்குகிறார்கள் என்று நினைக்காதீர்கள்!. அரியலூர் பெரம்பலூர் மாவட்டம் வரை இவர்களுடைய கைகள் நீண்டு கிடக்கிறது. ஜோய் ஆலுக்காஸ், ஜோஸ் ஆலுக்காஸ், மணப்புரம் ஜூவல்லர்ஸ், மலபார் கோல்டு, கல்யாண் ஜுவல்லர்ஸ், முத்தூட் பின்கார்ப், மினி முத்தூட், முத்தூட் கார்ப்பரேஷன் என வட்டித் தொழிலிலும், நகைத் தொழிலிலும் மலையாளிகள் இன்று தமிழகத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கிறார்கள். பாரம்பரியமான தமிழக நகை வியாபாரிகளை கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணவில்லை.

சென்னையில் 10 விடுதிகள் இருக்கிறது என்றால், அதில் 8 விடுதிகள் இன்றைக்கு மலையாளிகளுக்கு சொந்தமானவை என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு தெரியும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மலையாள ஆதார் அட்டை மூலம் தமிழகத்தில் வாங்கப்பட்ட சொத்துக்களின் பரப்பு எவ்வளவு என்கிற கேள்விக்கு விடை கிடைத்தால் நம் தலை சுற்றி விடும்.

நீலகிரி மாவட்டத்தில் தாளூர், சேரம்பாடி, பந்தலூர், கூடலூர் வரை அத்தனையும் மலையாள நாட்டின் சொத்துக்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் நகரத்தில் உணவகம் வைத்திருக்கும் மலையாளிகள், விலைப்பட்டியலை மலையாளத்திலேயே வைத்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உதகை, குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, கல்லட்டி என நீலகிரி மாவட்டத்தில் பெரும்பகுதியை வளைத்துப் போட்டிருக்கிறது மலையாள நில மாஃபியா. பேக்கரி தொழிலைக் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை...கோவை ஈரோடு திருப்பூர் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் 20 விழுக்காடு நிலங்களை தாண்டி கையகப்படுத்தி இருக்கிறது மலையாள நில மாஃபியா.

Updated On: 7 April 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  2. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  3. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  4. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  7. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  9. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  10. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!