திடீர் நெஞ்சுவலி:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
திடீர் நெஞ்சுவலி:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி
X

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா. கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதன்காரணமாக அந்த தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக திருமகன் ஈ.வே.ரா.வின் தந்தையும் முன்னாள் மத்திய மந்திரியுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை விட சுமார் 66 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி அடைந்தார். கடந்த வாரம் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். நெஞ்சு வலி காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதயவியல் நிபுணர்கள் சிகிச்சையளித்து வருகின்றனர்.

Updated On: 2023-03-17T15:37:59+05:30

Related News

Latest News

 1. கரூர்
  கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
 2. கல்வி
  employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
 3. கரூர்
  பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
 4. தூத்துக்குடி
  அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
 5. கரூர்
  கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
 6. லைஃப்ஸ்டைல்
  வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
 7. கல்வி
  students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
 8. பேராவூரணி
  பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...
 9. சினிமா
  வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை
 10. லைஃப்ஸ்டைல்
  143 meaning in tamil-143 என்பது எதை குறிக்கிறது..? இளைஞர்களின் கனவு...