/* */

அரியவகை உயிரினங்கள், போதைப் பொருட்கள் கடத்தல்: சுங்கத்துறையினர் பறிமுதல்

உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள் மற்றும் போதைப் பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

அரியவகை உயிரினங்கள், போதைப் பொருட்கள் கடத்தல்: சுங்கத்துறையினர் பறிமுதல்
X

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தின் பார்சல்களில் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள் மற்றும் போதைப் பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வெளிநாட்டு அஞ்சல் அலுவலகத்தில் போலந்து நாட்டில் இருந்து வந்திருந்த பார்சல் ஒன்றில் ஒட்டுண்ணி வகை உயிரினம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதனை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.


ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த கஜுலகா என்பவருக்கு அந்த பார்சல் அனுப்பப்பட்டிருந்தது. அதனைப் பிரித்து பார்க்கையில், தெர்மாகோல் பெட்டி ஒன்றில் 10 சிறிய நெகிழிக் குப்பிகள் பருத்தி மற்றும் வெள்ளிக் காகிதத்தில் சுற்றப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


அதனை மேலும் சோதனையிட்டதில் ஒவ்வொரு குப்பிக்குள்ளும் உயிருள்ள 10 அரியவகை சிலந்திகள் இருப்பது தெரியவந்தது. சிலந்திகளை சோதனையிட்ட விலங்கு தனிமைப்படுத்தல் அதிகாரிகள், அவை இறக்குமதி சட்டத்திற்கு புறம்பானது என்பதாலும், வெளிநாட்டு வர்த்தக உரிமம் மற்றும் இதர ஆவணங்கள் இல்லை என்பதாலும், சிலந்திகளை அவை எந்த நாட்டிலிருந்து வந்தனவோ, அங்கேயே அனுப்பி வைக்குமாறு பரிந்துரைத்தனர்.

சுங்கச் சட்டம் 1962-ன் படி சிலந்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் சிலந்திகள் அடங்கிய பார்சல் போலந்திற்கு திருப்பி அனுப்பப்படுவதற்காக தபால் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் சென்னை விமான நிலைய சுங்கத்துறை மதிப்பீட்டு துறை பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களையும் கண்டறிந்துள்ளது. 274 கிராம் கஞ்சா அடங்கிய 3 பார்சல்கள், எம்டிஎம்ஏ மாத்திரைகள், மெதாம்ஃபெடமைன், அம்ஃபெடமைன், சராஸ் உள்ளிட்ட 92 கிராம் எடை கொண்ட போதை பொருட்கள் அடங்கிய 5 பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வந்திருந்த இந்த பார்சல்கள் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் விசாரணை நடைப்பெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 Sep 2021 4:56 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  8. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  10. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!