/* */

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் ஒரு கோடியைத் தாண்டியது : சுகாதாரத்துறை அமைச்சர்

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டியதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேட்டி.

HIGHLIGHTS

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள்  ஒரு கோடியைத் தாண்டியது : சுகாதாரத்துறை அமைச்சர்
X

சென்னை கிண்டியில் உள்ள சுகாதார துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் இல்லத்தில் தனியார் அமைப்பு சார்பில் சுகாதாரத் துறைக்கு ஆக்சிசஜன் செரிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது..

கொரோனா நோய்க்கு தடுப்பூசி ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக பொதுமக்கள் அதிகப்படியான தடுப்பூசிகளை தற்பொழுது செலுத்தி கொண்டு வருகின்றனர். விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். பொது மக்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டமாகக் கூடி தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதை தவிர்க்க வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தடுப்பூசி தட்டுப்பாட்டை பூர்த்தி செய்து வருகின்றனர்.

தற்பொழுது தமிழகத்தில் 1300க்கும் மேற்பட்டோர் கருப்புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரும்புஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைந்து வருகின்றனர். இதற்கான மாற்று மருந்து அதிதீவிரமாக உள்ள நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் ரெமிடெசிவர் கள்ளச் சந்தையில் விற்பவர்கள் கடுமையாக சட்டத்தின் மூலம் தண்டிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா தொற்று உச்சத்தில் இருக்கும் பொழுது கடுமையான கட்டுப்பாட்டுகள் விதித்தும் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது தொற்று மிகுதியாக குரைந்ததன் பின்பே மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோடியே 30லட்ட்சத்தி 30,594 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 573 நபர்களுக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலத்தில் மருந்துகளுக்கு வரி குறைக்கவேண்டும் என்று ஜி.எஸ்.டி கூட்டத்தில் தமிழக அரசால் வலியுறுத்தபட்டது. மேலும் பிரதமரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Updated On: 14 Jun 2021 3:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  2. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  3. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  4. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  5. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  6. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  7. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  9. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  10. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்