/* */

அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு : விழிப்புணர்வு மிக அவசியம்

மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் ' ஒமைக்ரான் தடுப்புக்கானநடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

HIGHLIGHTS

அதிகரிக்கும் ஒமைக்ரான் பாதிப்பு : விழிப்புணர்வு மிக அவசியம்
X

இதுவரை 19 பேருக்கு ஒமைக்ரான் தொற்றின் அறிகுறி காணப்படுவதாக தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை முதன்மைச் செயலர் தெரிவித்திருக்கிறார். மாவட்ட ஆட்சியர்களுக்கும், மாநகராட்சி ஆணையர்களுக்கும் ' ஒமைக்ரான் தடுப்புக்கானநடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் 83 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் 'ஓமைக்ரான' பாதிப்பில் 32 பாதிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டுமாக காணப்படுகிறது.

உலக அளவில் ஒமைக்ரான் எதிர்பாராத அளவு வோமாகப் பரவிவருகிறது என்று உசுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதிலிருந்து அதன் தீவிரத்தை உணர்ந்துகொள்ளலாம்.

ஏறக்குறைய 90 நாடுகளில் இதுவரை ' ஒமைக்ரான் தொற்று காணப்படுவது உறுதியாகி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோமின் கணிப்புப்படி ஏனைய நாடுகளில் நோய்த்தொற்று கண்டறியப்படாவிட்டாலும் பெரும்பாலான நாடுகளில் 'ஒமைகரான்' உருமாற்றம் நுழைந்திருக்கிறது.

அதிவேக மாகவும், அதிக அளவிலும் 'ஒமைக்ரான' உருமாற்ற பாதிப்பு தாக்குமானால், அதன் தீவிரம் குறைவாக இருந்தாலும்கூட அதை எதிர் கொள்ளும் அளவிலான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட "ஓமைக்ரான்" உருமாற்றம், ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளை பாதித்ததும், இரண்டு தவனை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களையும் தாக்கியதும் நமக்கு அச்சத்தை அதிகரிக்கிறது.

ஆப்பிரிக்க கண்டத்தில் அதிவேகமாகப் பரவிவரும் 'ஒமைக்ரான்" பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொருஐந்து நாள்களிலும் இரட்டிப்பாகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ஆப்பிரிக்க கண்டம் 83% அதிகரித்த பாதிப்பை எதிர்கொண்டது.

அந்த கண்டத்தில் 20 நாடுகளில் மட்டும்தான் 10% மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதால், பாதிப்பு அதிகரித்திருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை. இந்தப் பின்னணியில் இரண்டாவது அலை கோவிட்19 தொற்றின்போது காணப்பட்ட மருத்துவமனை தேவைகளையும், உயிரிழப்புகளையும் குறைப்பதற்கு பூஸ்டர் டோஸ்" எனப்படும் ஊக்குவிப்பு தடுப்பூசி போடுவது பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநர்கள் கருதுகிறார்கள். ஒமைக்ரானுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு காலதாமதமாகும் என்கிற நிலையில், உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. 'பூஸ்டர் டோஸ்' அதில் முக்கியமானது.

இரண்டு தவணை போடப்பட்ட தடுப்பூசிகளின் வீரியம் குறைந்து வருவதாகத் தெரிவிக்கின்றன. தாக்காமல் இருக்க பூஸ்டர் டோஸ்' போடலாம் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர். எப்போது 'பூஸ்டச் டோஸ் போடுவதைத் தொடங்குவது என்பதும், அதற்கு எந்தத் தடுப்பூசி மருந்தை பரிந்துரைப்பது என்பதும் மத்திய அரசின் முன் உள்ள மிகப் பெரிய சவால்கள்,

தற்போதைய நிலையில் இந்தியாவில் ஐந்து கோடி பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டு ஆறு முதல் 10 மாதங்கள் கடத்துவிட்டன. அவர்களில் 2.7 கோடி பேர் முன் களப் பணியாளர்களும், மூத்த இணை நோய்கள் காணப்படுபவர்களும் என்பதால் உருமாற்றத் தீநுண்மிகளின் பாதிப்புக்கு உள்ளாகாமல் அவர்களை பாதுகாக்க வேண்டும். இன்னும்கூட இந்தியாவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்படாத நிலையில் இப்போது பூஸ்டர் டோஸின் தேவையும் வருகிறது.

Updated On: 17 Dec 2021 3:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?