/* */

சீர்காழி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு

சீர்காழி அருகே தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து இருவர் உயிரிழந்த சம்பவம் பற்றி கலெக்டர் விசாரணை நடத்தினார்.

HIGHLIGHTS

சீர்காழி அருகே தொழிற்சாலையில்  பாய்லர் வெடித்து இருவர் உயிரிழப்பு
X

தொழிற்சாலை விபத்து பற்றி மயிலாடுதுறை  மாவட்ட கலெக்டர் லலிதா நேரடி விசாரணை நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தொடுவாய் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் இறால் தீவனம் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று காலை நீராவி பாய்லர் வெடித்து சிதறி விபத்து ஏற்பட்டது.இவ்விபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அருண்ஓரன்,பல்ஜித்ஓரன் ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.ரகுபதி,மாரிதாஸ்,ஜாவித் ஆகிய மூவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் ரகுபதி ஆபத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங் ஆய்வு செய்தனர்.அப்போது மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்தில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களிடம் நேரில் விசாரனை மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து விபத்து குறித்து விரிவான அறிக்கை அரசுக்கு அனுப்பியுள்ளோம்.மேலும் விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான ஆய்வு செய்யப்பட்ட பின்னரே இறால் தீவன தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கப்படும் எனவும், அதுவரை தொழிற்சாலை இயங்க தற்காலிக தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டார்.

Updated On: 20 Feb 2022 2:43 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  4. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  6. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  7. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  9. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை