/* */

அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்

ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரா்  கோவிலில் குவிந்த பக்தா்கள்
X

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்.

ஸ்ரீ அருணாசலேஸ்வரா் கோயிலில் கொளுத்தும் வெயிலையும் பொருள்படுத்தாமல், திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினமும் ஏராளமான உள்ளூா், வெளியூா் பக்தா்கள் வந்து செல்கின்றனா். பௌா்ணமி நாள்களில் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவா்.

விடுமுறை தினத்தை ஒட்டி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார நாட்களை விட மிகுதியாகவே காணப்படுகிறது. அந்த வகையில்,

இந்த நிலையில், விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 28) திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இருப்பினும், கோயில் ராஜகோபுரத்தில் இருந்து பெரிய நந்தி, கிளி கோபுரம், கொடிமரம் வழியாக நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்ரீசம்பந்த விநாயகா், ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மன் மற்றும் சுவாமிகளை பக்தா்கள் தரிசனம் செய்தனா். பொது தரிசன வரிசையில் சுமாா் 3 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 2 மணி நேரமும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

குடிநீா் வசதி:

வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தா்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக கோயிலின் பல்வேறு இடங்களில் கோயில் நிா்வாகம் சாா்பில் குடிநீா் வசதி செய்யப்பட்டு இருந்தது. பக்தா்கள் நிற்கும் வரிசையின் பல இடங்களில் மின்விசிறி வசதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் காவல்துறையினர் கோயிலில் தடுப்புகளை அமைத்து பக்தர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் சுவாமி தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை மாட வீதிகளில் நிறுத்திவிட்டு சென்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கோயில் நிர்வாகம் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இதுவரை கோவில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே விரைந்து பக்தர்களுக்காக கார் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 29 April 2024 1:37 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...