/* */

அண்ணாமலை ஐ.பி.எஸ்., கொஞ்சம் கவனியுங்க... மக்கள் ஆதரவை அறுவடை செய்யுமா பா.ஜ..?

Annamalai BJP - தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தாலும், இந்த ஆதரவை ஓட்டுக்களாக பதிவு செய்யும் அளவுக்கு பா.ஜ.,விடம் உள்கட்டமைப்பு இல்லை.

HIGHLIGHTS

அண்ணாமலை ஐ.பி.எஸ்., கொஞ்சம் கவனியுங்க...  மக்கள் ஆதரவை அறுவடை செய்யுமா பா.ஜ..?
X

பாஜக தலைவர் அண்ணாமலை.

Annamalai BJP - தமிழகத்தில் மெல்ல, மெல்ல வளர்ந்து வரும் பாரதீய ஜனதா கட்சி இன்று தி.மு.க.,விற்கு தான் தான் மாற்று என்கிற நிலையை எட்டி உள்ளது. தமிழகத்தில் இந்து சமூக மக்கள் மத்தியில் பா.ஜ.,விற்கு பெரும் ஆதரவு உண்டு என்பதை திராவிடக்கட்சிகள் கூட மறுக்கவில்லை. உளவுத்துறையினரும் உறுதிப்படுத்துகின்றனர். அரசியல் அறிஞர்களும், ஆய்வாளர்களுமே பா.ஜ., வளர்ந்து வருகிறது என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

எம்.பி சீட்டு பெறுமா?

பா.ஜ., தமிழகத்தில் வரும் லோக்சபா தேர்தலில் இரண்டு இலக்கத்தில் எம்.பி., சீட்டுகளை எடுக்க முடியுமா? முடியாதா? என்கிற விவாதமே தற்போது சூடு கிளப்பி உள்ளது. அதாவது பா.ஜ., தமிழகத்தில் வளரவே வளராது என்ற நிலை மாறி, இன்று இரட்டை இலக்கத்தில் எம்.பி., சீட்டுக்களை கைபற்றுமா என்ற அளவுக்கு விவாதம் சூடுபிடித்துள்ளது.

அந்த அளவு பா.ஜ.,வினருக்கு இந்து மக்களின் ஆதரவு பெருகி உள்ளது. இது மறுக்கவே முடியாத உண்மை. ஆனால் இந்த ஆதரவு ஓட்டாக மாறுமா? என்ற கேள்விக்கு மாற்றும் வல்லமை பா.ஜ.,விடம் இல்லை என்றே அரசியல் ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் பா.ஜ., என்றால் இன்று அண்ணாமலை ஒருவர் மட்டுமே உள்ளார். இரண்டாம் கட்ட தலைவர்களில் ஓரிருவர் மட்டுமே மக்களுக்கு அறிமுகம் ஆன நிலையில் உள்ளனர். அண்ணாமலையின் அரசியல் இதுவரை தமிழக அரசியல் களம் கண்டிராத ஒரு புதுமை என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. திராவிட கட்சிகளுக்கு இதுவரை பதிலளிக்க முடியாமல், தவித்துக் கொண்டிருந்த தேசிய கட்சிகள், இப்போது திராவிடக்கட்சிகளை வாக்குவாதத்தில் புரட்டி எடுத்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

பிளஸ்சுக்கு இனியாக மைனஸ் :

'கட்சி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வாங்கி விட்டு, மாநாடு நடத்துகின்றனர் இந்த சங்கிகள்' என பா.ஜ.,வே மீம்ஸ் போடும் அளவு அக்கட்சியினர் தங்கள் கட்சிக்கு கூடும் கூட்டத்தை பார்த்து பெருமிதம் கொள்கின்றனர் என்பதிலும் உண்மை உண்டு. இப்படி எல்லா பக்கமும் பா.ஜ.,விற்கு பிளஸ் அதிகரித்துக் கொண்டே வரும் போது மைனஸ் தான் என்னப்பா என்று கேட்டால் பிளஸ்களின் எண்ணிக்கைக்கு ஈடாக மைனஸ்களும் அதிகரித்து வருவதை கவனியுங்கள் என அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

வழக்கமாக பா.ஜ., எந்த மாநிலத்தில் வேரூன்ற நினைத்தாலும், ஒரு கட்சியை அழித்து அந்த கட்சியின் மீதே முளைத்து எழும். பி்ன்னர் விஸ்வரூபம் எடுக்கும். இது வடஇந்திய அரசியலுக்கு சரியாக வரலாம். ஆனால் அதே பாணி தமிழகத்தில் எடுபடுமா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். தமிழகத்தில் அ.தி.மு.க.,வை அழித்து அக்கட்சியை கைப்பற்றி அதன் மீது வளர பா.ஜ., திட்டமிடுகிறது. இது சாத்தியமே இல்லை என அடித்துக்கூறுகின்றனர்.

திமுக vs அதிமுக :

காரணம் அ.தி.மு.க., என்பது தி.மு.க.,வின் மீது ஏற்பட்ட வெறுப்பு அரசியலில் பிறந்த கட்சி. எனவே தி.மு.க., இருக்கும் வரை அ.தி.மு.க.,வும் இருக்கும். இரட்டை இலையை முடக்கினாலோ, அ.தி.மு.க.,வை உடைத்தாலோ மீ்ண்டும், மீண்டும் ஏதாவது ஒரு ரூபத்தில் அ.தி.மு.க., உயிர்த்தெழுந்து கொண்டே இருக்கும்.

பின்னர் என்ன தான் வழி? அ.தி.மு.க., தி.மு.க.,விற்கு இணையான கட்சி உள்கட்டமைப்பினை கொண்டு வர வேண்டும். அ.தி.மு.க.,விலோ, தி.மு.க.,விலோ உள்ள மாவட்ட செயலாளர்கள் முதல் கடைசி கட்ட தொண்டன் வரை தன் கட்சிக்காக எந்த அளவுக்கும் களத்தில் இறங்கி வேலை செய்வான். வெயில், மழை, புயல், வெள்ளம் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் கட்சி ஓட்டுக்களை அள்ளிக் கொண்டு வந்து தன் கட்சியின் ஓட்டுப்பெட்டிக்குள் சேர்த்து விடுவான். இது தான் அக்கட்சிகள் உயிர்ப்புடன் இருக்கவும், அடுத்தடுத்து வெற்றிகள் பெறவும் காரணமாக உள்ளது.

இரண்டாம் கட்ட தலைவர்கள் :

பா.ஜ.,வில் அண்ணாமலையை தவிர திராவிட கட்சிகளின் தலைவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் இரண்டாம் கட்ட தலைவர்களோ (ஒரிருவர் தவிர), மாவட்ட தலைவர்களோ, ஒன்றிய தலைவர்களோ, நகர, பேரூர் கழக தலைவர்களோ இல்லை. கிராம பஞ்சாயத்து அளவில் கூட இல்லை. இப்போது இருக்கும் தலைவர்கள் தான் அணிந்திருக்கும் வெள்ளைச்சட்டையில் துாசி படிந்து விடக்கூடாது என நினைக்கும் அளவுக்கு பக்குவமான வாழ்க்கை வாழ்பவர்கள். களப்பணிக்கு எந்த தொடர்பும் இல்லாதவர்கள். நல்ல அரசு வேண்டும் என மக்கள் நினைத்தால் எங்களுக்கு ஓட்டுப்போடட்டும் என நினைப்பவர்கள்.

களப்பணி செய்யும் நிர்வாகிகள் தேவை :

ஆனால் தி.மு.க.,வோ, அ.தி.மு.க.,வோ பா.ஜ.,வின் ஆதரவு ஓட்டுக்களை பணம் கொடுத்தோ, அடித்தோ, மிரட்டியோ, உருட்டியோ வழிப்பறி செய்து தனது ஓட்டுப்பெட்டிக்குள் கொண்டு சேர்த்து விடும் வல்லமை கொண்டவர்கள். அந்த கட்சிகளுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு களப்பணி ஆற்றும் வல்லமை கொண்ட தலைவர்களை பா.ஜ., எந்த ஒரு மாவட்டத்திலும் நியமிக்கவில்லை. (பா.ஜ.,வின் மாநில கட்சி பதிவேடுகளில் உள்ள எண்ணிக்கைக்கும், தகவல்களுக்கும், நிஜத்திற்கும் மிகுந்த வேறுபாடு உண்டு).

திராவிட கட்சிகளை பிரஸ் மீட்டில் வீழ்த்துவதாலோ, டிஜிட்டல் மீடியாவில் வீழ்த்துவதாலோ, சோசியல் மீடியா பலத்தை வலுவாக உருவாக்கி வைத்திருப்பதாலோ, தி.மு.க.,வினரையும், பிற கட்சியினரையும் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறி, கைது செய்து சிறையில் அடைப்பதாலோ, அக்கட்சிகளின் ஆட்சியை பற்றி குறை பேசுவதாலோ எதுவுமே மாறிவிடப்போவதில்லை. மக்களிடம் மறதி என்ற நோய் பெருமளவில் வளர்ந்து நிற்கிறது. தேர்தல் நாளன்று தி.மு.க., அ.தி.மு.க.,வை முறியடித்து பணத்தை கொண்டு போய் மக்களிடம் திணித்து, அவர்களை குண்டுக்கட்டாக துாக்கி வைத்து ஓட்டுப்பெட்டிக்குள் ஓட்டுப்போட வைக்கும் அளவுக்கு பா.ஜ., எப்போது தனது கிளைகளை வளர்த்து எடுக்கிறதோ அன்று தமிழகத்தில் பா.ஜ., மலரும்.

அண்ணாமலை சார்..இதையும் கொஞ்சம் கவனிங்க..!

அதுவரை தமிழகத்தில் பா.ஜ., என்றால் மோடி, அமித்ஷா, அண்ணாமலை என்ற மூவரை மட்டுமே சுற்றிச்சுழலும். இன்றைய பா.ஜ.,விற்கு தேசப்பற்று மிகுந்த நல்லவர்களை விட, தேசப்பற்று மிகுந்த வல்லவர்கள் தேவை என்பதை அண்ணாமலை ஐ.பி.எஸ்., எப்போது உணர்கிறாரோ அன்று தான் கட்சி வளரும் என அரசியல் விமர்சகர்கள், பார்வையாளர்கள், அறிஞர்கள் என அத்தனை பேரும் ஒட்டுமொத்தமாக கருத்து கூறுகின்றனர். அண்ணாமலை ஐ.பி.எஸ்., இதையும் கொஞ்சம் கவனியுங்களேன்....!

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Jun 2022 10:56 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...