புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

how to apply ration card in tamil-

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?
X

how to apply ration card in tamil- ரேஷன் கார்டு (மாதிரி படம்)

how to apply ration card in tamil-ஒரு காலத்தில் ரேஷன் கார்டு வாங்கணும்னா தாலுகா ஆபீசுக்கு அலையோ அலைன்னு அலைந்த காலம் உண்டு. அதேபோல கார்டு தொலைஞ்சு போனா எங்க..எப்படி வாங்குவது என்று தெரியாது. பல பேர் நான் வாங்கித்தரேன் என்று சொல்லி ஆயிரக்கணக்கில் பணம் வாங்கி ஏமாற்றுவதும் உண்டு.

ஆனால் இப்போது ரேஷன் கார்டு பெறுவதற்கு தாலுகா அலுவலகம் செல்லத்தேவையில்லை. ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அவ்வளவு எளிமையாக ரேஷன் கார்டு பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் கார்டு மற்றும் உணவுப்பொருட்கள் வழங்கும் திட்டம் தமிழக அரசின் பொது வினியோக திட்டத்தின் கீழ் வருகிறது. ரேஷன் கார்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விண்ணப்பிக்கவும் முக்கிய ஆவணமாக பயன்படுகிறது.

தனி குடும்பமாக தமிழகத்தில் வசிப்பவர்கள் ரேஷன் கார்டுக்கு விண்ணபிக்கலாம். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினர், தமிழகத்தில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தாரின் பெயர் வேறு எந்த குடும்ப அட்டையிலும் இருக்கக் கூடாது.


புதிய அட்டைக்கான விண்ணப்பம்

how to apply ration card in tamil-இப்போது எப்படி ஆன்லைனில் ரேஷன் கார்டு பெற விண்ணப்பம் செய்வது என்று பார்ப்போம். இதற்காக https://tnpds.gov.in/ என்ற இணையதளத்துக்கு சென்று லாகின் (log in)செய்யவும். அதில் மின்னணு அட்டை சேவைகள் என்பதன் கீழ், மின்னணு அட்டை விண்ணபிக்க என்பதை 'கிளிக்' செய்யவும். அது ஒரு புதிய பக்கம் ஒன்றிற்கு அழைத்துச் செல்லும். அதில் புதிய அட்டைக்கான விண்ணப்பம் என்பதை 'கிளிக்' செய்யவும். பின்னர் Name of family head என்ற கட்டத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பெயரை சரியாக பதிவிட வேண்டும்.

போட்டோ பதிவேற்றம்

பின்னர் மற்ற விவரங்களை கொடுக்க வேண்டும். குறிப்பாக முகவரி, மாவட்டம், தாலுகா, கிராமம், அஞ்சல் குறியீட்டு எண், மொபைல் எண், மெயில் ஐடி என பலவற்றையும் சரியாக கொடுக்கவேண்டும். அதோடு விண்ணப்பத்தில் குடும்ப தலைவருக்கான புகைப்படம் என்ற இடத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். இது 5 எம்பி அளவில் இருக்க வேண்டும்.


என்ன வகையான அட்டை?

இதன் பிறகு அட்டை தேர்வு என்ற கட்டத்தில் என்ன அட்டை வேண்டும் என்பதை 'கிளிக்' செய்யவும். பின்னர் இருப்பிட சான்று என்ற இடத்தில் உங்களிடம் உள்ள ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்யலாம். இது 1 எம்பி அளவில் இருக்க வேண்டும். இதற்காக வீட்டு வரி ரசீது, கேஸ் பில், டெலிபோன் பில், தண்ணீர் பில் போன்றவைகளில் ஏதேனும் ஒன்றை பதிவேற்றலாம்.

கேஸ் இணைப்பு பற்றிய விவரங்கள்:

how to apply ration card in tamil-கேஸ் இணைப்பு பற்றிய விவரங்களில், எண்ணெய் நிறுவனம் எது என கொடுக்கவும். உங்களிடம் ஒரு இணைப்பு மட்டும் இருப்பின் ஒன்றில் மட்டும் கொடுத்தால் போதும். இரண்டு இருந்தால் இரண்டிலும் கொடுக்க வேண்டும். அதன் பிறகு எரிவாயு நிறுவனத்தின் பெயரை கொடுக்கவும் (HP, Bharat,Indane ).

உறுப்பினர் சேர்க்கை :

அடுத்ததாக உறுப்பினர் சேர்க்கை என்பதை 'கிளிக்' செய்யவும். அதில் முதலாவதாக குடும்பத் தலைவர் பெயரை பதிவிடவும். அதில் ஏற்கனவே நாம் கொடுத்த விவரங்கள் வரும். அதில் இல்லாதவற்றை செலக்ட் செய்து கொடுக்கலாம். உதாரணத்திற்கு பிறந்த தேதி, ஆண் பெண், வருமானம், ஆதார் அட்டை, மொபைல் எண் உள்ளிட்ட விவரங்களை கொடுக்கவும். கடைசியாக ஸ்கேன் செய்து ஆதாரினை அப்லோட் செய்ய வேண்டும். அப்லோட் செய்த பிறகு உறுப்பினர் சேர்க்கை 'சேமி' என்ற ஆப்சனை 'கிளிக்' செய்யவும்.

குழந்தைகள் பெயர் பதிவேற்றம்

பின்னர் யாரை சேர்க்க வேண்டும்? அவருடைய பெயர் என்ன? குடும்ப தலைவருக்கு என்ன உறவு? அதாவது மகன் மகள், மனைவி என்பதை கொடுக்க வேண்டும். அவருடைய விவரங்களை முழுமையாக பதிவிட்டு, ஆதார் கார்டினை பதிவேற்றம் செய்ய வேண்டும். 5 வயதிற்குட்பட்ட குழந்தை எனில் பிறப்பு சான்று கொடுத்தால் போதுமானது. அதனையும் பதிவேற்றம் செய்து, உறுப்பினர் சேர்க்கையை சேமி என்பதை 'கிளிக்' செய்தால் பதிவுகள் சேமித்து வைக்கப்படும். இதில் ஏதேனும் திருத்தம் எனில் 'Edit' என்பதை 'கிளிக்' செய்து திருத்தம் செய்யலாம்.

எரிவாயு இணைப்பு பற்றிய விவரம்

பின்னர் எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்கள் என்பதன் கீழ், உங்களது கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயரை பதிவு செய்யவேண்டும். அதாவது கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதை பதிய வேண்டும். பிறகுகொடுக்கப்பட்ட விவரங்கள் சரியா என ஒரு முறைக்கு இரு முறை பார்த்துஉறுதி செய்துகொள்ளலாம். 'உறுதிப்படுத்தல்' என்பதை 'கிளிக்' செய்து கொள்ளுங்கள்.

விவரங்கள் சரியாக உள்ளதா?

how to apply ration card in tamil-பின்னர் விவரங்கள் சரியானதா என்பதை பார்த்து, 'பதிவு செய்' என்பதை கொடுங்கள். நீங்கள் கொடுத்த விவரத்தில் ஏதேனும் தவறு இருந்தால், அது சிவப்பு நிறத்தில் தவறை சுட்டிக்காட்டும். ஆக அதனை சரியாக பதிவு செய்யவேண்டும். பின்னர் கொடுத்த விவரங்கள் சரியானவை எனில் உறுதிசெய் என்ற ஆப்சனை 'கிளிக்' செய்யவும்.

குறிப்பு எண் அவசியம்

பின்னர் மின்னணு அட்டை விண்ணப்பம் வெற்றிகரமாக சமர்பிக்கப்பட்டது என வரும். அதில் குறிப்பு எண்ணும் வரும். அதனை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும். அந்த எண்ணை வைத்து தான் கார்டின் நிலையை அறிந்துகொள்ள முடியும். இதனை கொடுத்த பிறகு உங்களது ஆதார் கார்டு, போட்டோ, அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை தாலூகா அலுவலகத்தில்(TSO) கொடுக்க வேண்டும். அப்படி செய்வதால் விரைவில் உங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படும்.

விண்ணப்பத்தின் நிலை

how to apply ration card in tamil-இதே இணையத்தில் முகப்பு பக்கத்தில் விண்ணப்பம் செய்த ரேஷன் கார்டின் நிலையை பார்த்துக் கொள்ள முடியும். நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவண சரிபார்ப்பு, துறை சரிபார்ப்பு, தாலுகா வழங்கல் அதிகாரியின் ஒப்புதல் என பல வழிமுறைகள் உண்டு. அதன்பிறகே உங்களுக்கு ரேஷன் கார்டு கிடைக்கும். அதற்கு 15 நாள் முதல் 1 மாதம் வரை ஆகலாம்.

Updated On: 1 July 2022 7:02 AM GMT

Related News

Latest News

 1. மேட்டுப்பாளையம்
  காட்டு யானை தாக்கி வாட்சர் பலி
 2. கோவை மாநகர்
  அவிநாசி அத்திக்கடவு திட்டத்தில் தாமதம்; கோட்டையை முற்றுகையிட பாஜக...
 3. ஆன்மீகம்
  வசியப்பொருத்தம் இருந்தால்தான் கணவன்-மனைவி காதல் மிளிரும்..! எப்டீன்னு...
 4. சினிமா
  பொன்னியின் செல்வன் படத்திற்காக இணையும் ரஜினி, கமல்: சும்மா அதிருமுல்ல
 5. சினிமா
  சகோதரியுடன் ரக்‌ஷாபந்தன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் யாஷ்
 6. தமிழ்நாடு
  கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடக்கம்
 7. சினிமா
  அதிதியை திட்டாதீங்க பிளீஸ்: பாடகி ராஜலக்ஷ்மி
 8. கல்வி
  பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: முதல்வர் ஆலோசனை
 9. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 10. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்