/* */

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் தங்கம் பறிமுதல்

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ 44 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

துபாயிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.44 லட்சம் தங்கம் பறிமுதல்
X

சென்னை விமானநிலையத்தில் சிக்கிய கடத்தல் தங்கம்.

துபாயிலிருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது.அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து சோதனையிட்டனா்.அப்போது சிவகங்கையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சுங்கத்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து இரு பயணிகளையும் நிறுத்தி சோதனையிட்டனா்.அவா்களுடைய சூட்கேஸ்க்குள் பாக்கெட் ஒன்று இருந்தது.அதை பிரித்து பாா்த்தபோது பெரிய கண்ணாடி பாட்டில் ஒன்று இருந்தது.அதை எடுத்து பாா்த்தபோது,அதனுள் சாம்பிராணி தூள்கள் இருந்தன.சுங்கத்துறையினா் அந்த சாம்பிராணி தூள்களை ஆய்வு செய்தபோது,அதற்குள் தங்கக்கட்டிகள்,தங்க செயின் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்து பறிமுதல் செய்தனா்.அந்த தங்கக்கட்டிகள்,செயின் மொத்த எடை 601 கிராம்.அதன் சா்வதேச மதிப்பு ரூ.26 லட்ச

அதோடு அவா்கள் உடமைகளை மேலும் சோதனையிட்டபோது,அதனுள் மறைத்து வைத்திருந்த ரூ.18 லட்சம் மதிப்புடைய மின்னணு சாதனங்களையும் பறிமுதல் செய்தனா்.இதையடுத்து துபாயிலிருந்து சாம்பிராணி தூள்களில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.44 லட்சம் மதிப்புடைய தங்கம்,மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்து சிவகங்கை பயணிகள் இருவரையும் கைது செய்தனா்

இதற்கிடையே இன்று காலை சென்னையிலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது.அந்த விமானத்தில் வெளிநாட்டு பணம் கடத்தப்படுவதாக பெங்களூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறைக்கு தகவல் வந்தது.இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனா்.அப்போது சென்னையை சோ்ந்த 2 ஆண் பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.அவா்களை நிறுத்தி சோதனையிட்டனா்.அதில் ஒரு ஆண் பயணியின் சூட்கேசுக்குள் ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாக சவுதி ரியால் வெளிநாட்டு பணம் மறைத்து வைத்திருந்ததை கண்டுப்பிடித்தனா்.இந்திய மதிப்பிற்கு 21.5 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்து,அந்த பயணியை கைது செய்தனா்.அதோடு அவருடைய துபாய் பயணத்தையும் ரத்து செய்தனா்

சென்னை விமானநிலையத்தில் அடுத்தடுத்து 2 துபாய் விமானங்களில் ரூ.65.5 லட்சம் மதிப்புடைய தங்கம்,வெளிநாட்டு பணம்,மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு,கடத்தலில் ஈடுபட்ட சென்னை,சிவகங்கையை சோ்ந்த 3 பயணிகளை சென்னை விமானநிலைய சுங்கத்துறை கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனர்.

Updated On: 5 Dec 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?