/* */

தபால் துறை வங்கி பெயரில் போலி இணையதளம்: 'சைபர் கிரைம்' எச்சரிக்கை

இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைத்து பண மோசடி நடைபெறுவதாக சைபர்கிரைம் எச்சரித்துள்ளது

HIGHLIGHTS

தபால் துறை வங்கி பெயரில் போலி இணையதளம்: சைபர் கிரைம் எச்சரிக்கை
X

தமிழ்நாடு 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக காவல்துறையின் 'சைபர் கிரைம்' பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய 'ஆன்லைன்' மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

தற்போது இணைய வழி மோசடி நபர்கள் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைத்து பண மோசடி செய்வதற்காக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்புகின்றனர். அந்த குறுஞ்செய்தியில், உங்கள் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. எனவே குறுஞ்செய்தியில் உள்ள 'லிங்க்'கை கிளிக் செய்து, உங்கள் பான் கார்டு எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.

இதனை உண்மை என்று நம்பி அந்த லிங்க்கை பொதுமக்கள் திறந்தவுடன், 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் இணையதளம் போலவே போலியான இணையதளம் தோன்றும். அதில் வாடிக்கையாளர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு எண், வாடிக்கையாளர் அடையாள எண், செல்போன் எண், பிறந்த தேதி, பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய கேட்கும். அந்த தகவல்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓ.டி.பி.யை பதிவு செய்ய கேட்கும்.

அதில் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்தவுடன் வாடிக்கையாளரின் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளர் ஏமாற்றப்படுகின்றனர்.

எனவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பிஷிங் இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களை கையாளுதல்கள் மூலமாக வருகிற 'லிங்க்'குகளை தொடர்பு கொள்ள வேண்டாம். ஓ.டி.பி.யையும் பகிர வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Updated On: 29 July 2023 4:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  2. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  3. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  4. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  5. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  6. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  7. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  8. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  9. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  10. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?