/* */

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

HIGHLIGHTS

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அமமுக சார்பில் வேட்பாளர் அறிவிப்பு
X

அமமுக வேட்பாளர் சிவப்பிரசாத்.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவப்பிரசாத் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் வேட்பு மனுதாக்கல் வருகிற 31-ம் தேதி தொடங்குகிறது. இதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க.வும் களம் இறங்கி உள்ளது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன. இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சிவபிரசாந்த் வேட்பாளராக களமிறக்கப்படுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட அமமுக செயலாளராக உள்ளார் சிவப்பிரசாத். மேலும், அவர் தேர்தலில் பணியாற்ற 294 பொறுப்பாளர்கள் தேர்தல் பணிக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:



தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பிப்ரவரி 27- ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.

வேட்புமனு தாக்கல் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8. வேட்பு மனுவை திரும்பப் பெற இறுதி நாள் பிப்ரவரி 10. வாக்குப்பதிவு பிப்ரவரி 27. வாக்கு எண்ணிக்கை மார்ச்-2.

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பிப்ரவரி 27 அன்று நடைபெறுகிறது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி மீண்டும் போட்டியிடுகிறது. மரணமடைந்த எம்எல்ஏ திருமகன் ஈவேரா முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் ஆவார்

அதிமுக யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமி க்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையிலிருப்பதால் அதிமுக எடப்பாடி அணியின் சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி. இராமலிங்கம், இதே கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ கே.எஸ், தென்னரசு ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புக்கிடைக்கும் என கூறப்படுகிறது. இவர் கடந்த 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களில் ஈரோடு மேற்கு தொகுதியில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி இது.

2021 தேர்தல் போலவே கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.2021 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாமக இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துவிட்டது. காங்கிரஸ் வேட்பாளராக ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார் .

2021 தேர்தலில் போட்டியிய கட்சிகள்:

திமுக+ (காங்கிரஸ்)- 67,300. 44.27 %

அதிமுக + (தமாக) - 58,396. 38.41 %

நாம் தமிழர் - 11,629. 7.65 %

மக்கள் நீதி மய்யம் + 10,005. 6.58 %

அமமுக +1,204 . 0.79 %

Updated On: 27 Jan 2023 2:05 PM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...