/* */

சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை கொலை வழக்கு..!

நாமக்கல் அருகே சிக்கன் ரைசில் விஷம் கலந்ததில் தாத்தா உயிரிழந்த நிலையில், தாயும் உயிரிழந்தார். மகன் மீது இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு :  மகன் மீது இரட்டை கொலை வழக்கு..!
X

சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்துகொடுத்து, தாய் மற்றும் தாத்தாவை கொலை செய்து, இரட்டை கொலை வழக்கில் கைதாகியுள்ள கல்லூரி மாணவர் பகவதி.

நாமக்கல் :

நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ் சாப்பிட்டு தாத்தா இறந்த நிலையில், தாயும் உயிரிழந்தார். இது சம்மந்தமாக ஏற்கனவே மகனை கைது செய்த போலீசார், தற்போது, அவர் மீது இரட்டைக் கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் அருகே உள்ள கொசவம்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், லாரி டிரைவர். இவரது மகன் பகவதி (20), புதுச்சத்திரத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு பி.இ. படித்து வந்தார். இவர் கடந்த ஏப். 30 ஆம் தேதி நாமக்கல் பஸ் ஸ்டேண்டு எதிரே உள்ள அசைவ ஓட்டலில், 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றார்.

வீட்டில் இருந்த அவரது தாயார் நதியாவிற்கு (40) ஒரு பொட்டலம் சிக்கன் ரைஸ் கொடுத்துள்ளார். பின்னர் தேவராயபுரத்தில் வசித்து வரும் தாத்தா சண்முகநாதன் (67) வீட்டிற்கு சென்று அங்கு தாத்தா சண்முகநாதன் மற்றும் குடும்பத்தினருக்கு சிக்கன் ரைஸ் கொடுத்துள்ளார். சிக்கன் ரைஸ் சாப்பிட்ட நதியா, சண்முகநாதன் ஆகியோருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், கடந்த 3ம் தேதி இரவு சண்முகநாதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இøதையொட்டி அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ரைஸ் ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யப்பட்டதில், அதில் பூச்சி மருந்து விஷம் கலந்துள்ளது. தெரியவந்தது. இது குறித்து கல்லூரி மாணவர் பகவதியிடம் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.

அப்போது பகவதி, நான்தான் சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்தேன் என ஒப்புக்கொண்டார், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதலித்தபோது தனது தாயாரும் தாத்தாவும் அதை ஏற்கவில்லை.

இதனால், தன்னுடைய குடும்பத்தினருக்கும், பெண்ணின் குடும்பத்தினருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முதல் தன்னிடம் தாய் நதியா பாசமாக இல்லை என்று தெரிவித்த பகவதி மேலும் ஒரு பெண்ணிடம் உள்ள தவறான பழக்கம், செல் போனில் ஆபாச படங்களை அடிக்கடி பார்த்தது குறித்து தாயும், தாத்தாவும் அடிக்கடி கண்டித்ததால், அனைவரையும் விஷம் கொடுத்து கொலை செய்ய முடிவு செய்தேன்.

இதற்காக நாமக்கல்லில் உள்ள அக்ரோ கடையில் கடந்த 27 ம் தேதியே, விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி வைத்துக்கொண்டேன். பின்னர் 30 ம் தேதி வீட்டிற்கு செல்லும் வழியில் நின்று சிக்கன் ரைசில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தேன் என்றும் அதை இருவர் மட்டுமே சாப்பிட்டார்கள், மற்றவர்கள் சாப்பிடவில்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பகவதியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்தனர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இறந்துபோன சண்முகநாதன் உடல் பிரேத பரிசோதனைக்குப்பிறகு அவரது உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த, பகவதியின் தாயார் நதியா, சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையொட்டி போலீசார் கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் தீய பழக்கத்தை கண்டித்த தாயையும், தாத்தாவையும், 20 வயது மாணவர் உணவில் விஷம் வைத்து கொலை செய்த சம்பவம் நாமக்கல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 4 May 2024 7:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு