/* */

சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள்

சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.

HIGHLIGHTS

சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்க பின்பற்ற வேண்டிய உணவு பழக்கவழக்கங்கள்
X

பைல் படம்.

சருமத்தை அழகுபடுத்துவதற்கு பேஷியல், பேஸ் கிரீம்கள், மாய்ஸ் சுரைசர் போன்றவற்றையே அதிகம் பேர் நாடுகிறார்கள். சாப்பிடும் உணவுகள் மூலமே சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க முடியும். அப்படிப்பட்ட உணவுகள் சிலவற்றை பார்ப்போம்.

வால்நட்: இதில் ஆரோக்கியமான கொழுப்புகள், துத்தநாகம், வைட்டமின் ஈ, செலினியம், புரதம் போன்ற சத்துக்கள் நிரம்பியுள்ளன. இவை வால் நட்டை ஆரோக்கியமான உணவு பொருளாக மட்டுமின்றி சருமத்திற்கு அழகு சேர்க்கும் பொருளாக மாற்றுகின்றன. அடிக்கடி பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்புள்ளவர்களுக்கு இது சிறந்த சிற்றுண்டியாக கருதப்படுகிறது. இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கொலோஜன் உற்பத்திக்கு உதவுகின்றன. மன அழுத்தத்தையும், அதன் அறிகுறிகளையும் கட்டுப்படுத்தி சரும நலனை பேணுவதற்கு உதவுகின்றன. வால்நட்டில் இருக்கும் துத்த நாகம் சருமத்தில் ஏற்படும் வீக்கம், காயங்களை கட்டுப்படுத்த துணை புரிகின்றன.

அவகேடோ: இதில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன. அவகேடோவில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் பி தொற்றுநோயை எதிர்த்து போராடும் வலிமையை அளிக்கக்கூடியது. மேலும் இதிலிருக்கும் வைட்டமின் ஈ, சருமத்திற்கு பாதுகாவலனாக செயல்படக்கூடியது. இது தீங்கு விளைவிக்கும் ப்ரீ ரேடிக்கல்களிடம் இருந்து சருமம் சேதமடையாமல் பாதுகாக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்சிடென்டுகள் சரும செல் களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. சரும சுருக்கங்கள், புள்ளிகள், வயதான தோற்றத்தை ஏற்படுத்தும் நுண்ணிய கோடுகள் போன்றவற்றிற்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கு புத்துணர்ச்சி தரக்கூடியவை.

கருப்பு சாக்லேட்: பொதுவாக சாக்லேட் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேர வழி வகுக்கும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆரோக்கியமான உணவுகளை பொறுத்தவரை, டார்க் சாக்லேட் இதயத்திற்கும், சருமத்திற்கும் நலம் சேர்க்கக்கூடியது. அதில் கார்டியோபிராக்டிவ் பண்புகள் உள்ளன. அவை பல வகையான நோய்களில் இருந்து இதயத்தை பாதுகாக்கக்கூடியவை. மேலும் டார்க் சாக்லேட், பயோ ஆக்டிவ் சேர்மங்களால் நிரம்பியுள்ளது. இது சருமத்திற்கு உகந்த உணவாக அமைகிறது.மேலும் அதில் உள்ள பிளவோனால்கள் சூரிய கதிர்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் அறிகுறிகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும். சருமத்தின் அடர்த்தியை அதிகரிக்க உதவும்.

தக்காளி: சரும துளைகள் பெரியதாக இருப்பவர்கள் சரும பராமரிப்புக்கு தக்காளி உபயோகிக்கலாம். இது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும். மேலும் தக்காளியில் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அவை சருமத்திற்கு தேவையான சத்துக்களையும், பளபளப்பையும் தரும். தக்காளியை உணவில் சேர்த்துக்கொள்வதோடு 'ஸ்க்ரப்பாக' சருமத்திற்கு பயன் படுத்தலாம். தக்காளி, சருமத்திற்கு மேலும் பல நன்மைகளை தரக்கூடியது.

Updated On: 14 May 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  2. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  3. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  4. திருவள்ளூர்
    புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை
  5. மாதவரம்
    வண்ண மீன் ஏற்றுமதி நிறுவனத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல்
  6. நாமக்கல்
    சுத்தமான இறைச்சி மட்டுமே பயன்படுத்த நாமக்கல் மாவட்ட ஆட்சியர்...
  7. வீடியோ
    பெயிலில் வெளியே சுத்தும் ராகுல் மற்றும் சோனியா காந்தி !#Rsrinivasan...
  8. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  9. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  10. குமாரபாளையம்
    குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குமாரபாளையம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்