/* */

விபத்தில் இருந்து ரயிலை காப்பாற்றிய தம்பதிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு

விபத்தில் இருந்து ரயிலை காப்பாற்றிய தம்பதிக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அழைத்து பரிசு வழங்கினார்.

HIGHLIGHTS

விபத்தில் இருந்து ரயிலை காப்பாற்றிய தம்பதிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசு
X

ரயிலை நிறுத்தி விபத்தில் இருந்து தப்ப வைத்த தம்பதியினர் (கோப்பு படம்)

தென்காசி அருகே விபத்தில் சிக்க இருந்த ரயிலை டார்ச் லைட் அடித்து நிறுத்திய வயதான தம்பதியை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார். மேலும், அவர்களுக்கு ரூ 5 லட்சம் ரூபாயை பரிசாக வழங்கினார்.

தென்காசி மாவட்டம் புளியரை அருகே 'எஸ்' வளைவு என்ற தமிழக - கேரள எல்லைப் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நள்ளிரவு 1.00 மணி அளவில் திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற லாரி ஒன்று நிலை தடுமாறி 40 அடி உயரத்திலிருந்து கவிழ்ந்து கீழே செல்லும் செங்கோட்டை - கொல்லம் ரயில் மார்க்கத்திலுள்ள தண்டவாளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது அப்பகுதியில் வசித்து வந்த தம்பதியர் சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினர் லாரி கவிழ்ந்து தண்டவாளத்தில் விழுந்து கிடப்பதை பார்த்துள்ளனர். மேலும் அதே நேரத்தில் அந்த வழியாக ரயில் வருவதையும் அவர்கள் பார்த்துள்ளனர். ரயில் தண்டவாளத்தில் தொடர்ந்து வந்தால் தண்டவாளத்தில் கிடந்த லாரி மீது மோதி ரயில் பெரும் விபத்துக்குள்ளாகும் என்று பயந்துள்ளனர்.

இதனால், எப்படியாவது ரயிலை நிறுத்தி விட வேண்டும் என்று எண்ணிய தம்பதியர், செங்கோட்டையிலிருந்து புனலூர் நோக்கி வந்து கொண்டிருந்த பகவதியம்மன் கோவில் திருவிழா சிறப்புப் பயணிகள் ரயிலை, தண்டவாளத்தில் சிறிது தூரம் ஓடிச்சென்று கையில் வைத்திருந்த டார்ச் லைட் ஒளியின் மூலம் ரயில் ஓட்டுநரிடம் சைகை காண்பித்து, ரயிலை நிறுத்த செய்துள்ளனர். அந்த வயதான தம்பதியினர் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக, ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை தடுக்கப்பட்டது. உடனடியாகத் தகவலறிந்து காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பொதுமக்களுடன் இணைந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த லாரியினை அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கிடையே சென்னையிலிருந்து கொல்லம் நோக்கிச் சென்ற விரைவு ரயிலும் செங்கோட்டை ரயில் நிலையத்திலே நிறுத்தப்பட்டது.

தங்களது முதிர்ந்த வயதையும், இருள் சூழ்ந்திருந்த நள்ளிரவு நேரத்தையும் பொருட்படுத்தாமல், பெரும் விபத்து நிகழ்வதைத் தடுத்து நிறுத்தும் ஒரே நோக்கத்துடன் தண்டவாளத்தில் ஓடிச்சென்று இரயிலை நிறுத்திய சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதியினரின் வீரதீர செயலை பாராட்டிய முதல்வர் முக ஸ்டாலின் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 5 இலட்சம் வெகுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சென்னை தலைமை செயலகத்தில் வைத்து தென்காசியை சேர்ந்த தம்பதிக்கு வீர தீர செயலுக்கான வெகுமதியை அளித்து பாராட்டும் தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சண்முகையா - வடக்குத்தியாள் தம்பதி கூறியதாவது:-

நள்ளிரவு லாரி விபத்து ஆனதும் கேட்ட சத்தத்தை கேட்டு எழுந்துவிட்டோம். அப்போது ரயில் வருவதை அறிந்து ஆளுக்கொரு டார்ச் எடுத்துக்கொண்டு ரயிலை நோக்கி ஓடினோம். ரயில் ஓட்டுநர் கண்ணை நோக்கி டார்ச் அடித்தேன். ரயில் ஓட்டுநரும் உடனே வண்டியை நிப்பாட்டினார். வண்டியை விட்டு இறங்கியதும் நன்றி தெரிவித்த ரயில் ஓட்டுநர் இண்டர்நெட்டில் போட்டுவிட்டார். உடனே போலீஸ், தீ அணைப்புக்கு படைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் வந்துவிட்டனர். அந்த இடத்தில் ரயில் எப்போதுமே மெதுவாகத்தான் வரும்.

30 கி.மீட்டர் வேகத்தில் தான் வண்டி வந்தது. கோவிலுக்கு செல்லும் சிறப்பு ரயில் அது. காலி வண்டிதான் வந்தது. ரயிலை காப்பற்ற வேண்டும் என்றுதான் எங்களுக்கு நினைப்பு ஓடியது. அந்த நேரத்தில் வண்டி வரும் என்று எங்களுக்கு தெரியும். முதல்வர் எங்களுக்கு பாராட்டு தெரிவித்து 5 லட்சம் பரிசு கொடுத்தார். நல்ல காரியம் பண்ணியிருக்கிறார்கள் என்று எங்களை முதல்வர் பாரட்டினார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 27 Feb 2024 4:53 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்