/* */

ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?

Onion Bonda Recipe - ரேசன் அரிசியை பயன்படுத்தி, ஆனியன் போண்டா செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.

HIGHLIGHTS

ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
X

Onion Bonda Recipe- ரேசன் அரிசியில் செய்த போண்டாகள் (கோப்பு படம்)

Onion Bonda Recipe - தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட கேட்பார்கள். அப்போது நீங்கள் பெரும்பாலும் பஜ்ஜி, போண்டா செய்வீர்களா?

பொதுவாக பஜ்ஜி, போண்டா செய்வதற்கு கடலை மாவைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் உங்கள் வீட்டில் ரேசன் பச்சரிசி அதிகம் இருந்தால், அதைக் கொண்டும் போண்டா செய்யலாம் தெரியுமா? அதற்கு அந்த அரிசியை 1 மணிநேரம் ஊற வைத்து அரைத்து, பின் போண்டாவிற்கு தேவையான பொருட்களை சேர்த்து பிசைந்து செய்ய வேண்டும். இந்த பச்சரிசி போண்டா நன்கு மொறுமொறுவென்று இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி வெங்காய போண்டாவை எப்படி செய்வதென்று ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.


தேவையான பொருட்கள்:

* ரேசன் பச்சரிசி - 1 கப்

* கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்

* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)

* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)

* சீரகம் - 1 டீஸ்பூன்

* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)

* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

* உப்பு - சுவைக்கேற்ப * எண்ணெய் - பொரிப்பதற்கு


தேவையான அளவு செய்முறை:

* முதலில் ரேசன் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து, நீர் சேர்க்காமல் தயிரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

* பிறகு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு பிசைந்து விட வேண்டும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, போண்டாக்களாக போட்டு, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வெங்காய போண்டா தயார்.

Updated On: 29 April 2024 5:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது