/* */

குமரியில் மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

கன்னியாகுமரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, கன்னியாகுமரி மாவட்டம் வரலாறு காணாத ஒரு பாதிப்பை சந்தித்துள்ளது. மாவட்டத்தில் 60 மேற்பட்ட கிராமங்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி தத்தளித்து வரும் நிலையில் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை துண்டிக்கப்பட்டு இருப்பதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

மேலும், 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 5 ஆவது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது, இப்படி பெரும் பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டு உள்ள நிலையில், இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாதிப்புகளை நேரில் பார்த்து ஆய்வு செய்வதற்காக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குமரிக்கு வருகை தந்தார்.

தொடர்ந்து, பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களை நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர், இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, குமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தமிழக முதல்வருடன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் உள்பட பலர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

Updated On: 16 Nov 2021 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்