/* */

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

HIGHLIGHTS

நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்கள், ஆசிரியர்களின் வருகை பதிவு
X

பைல் படம்.

விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. செயலி வருகைப்பதிவு நடைமுறை பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் புதிய முறை அமலுக்கு வருகிறது.

கூகுள் பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த ஆப் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியில் தற்போது மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகையை உள்ளிடுவதற்கான தொகுதிகள், மாணவர்களின் உடல்நிலையை பரிசோதித்து மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பதற்கான தொகுதிகள், பள்ளிக்கு வெளியே உள்ள மாணவர்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கான தொகுதிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிக்கு பதிவு செய்வதற்கான தொகுதிகள் உள்ளன. தகவல்களும் பாதுகாப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 31 July 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடேங்கப்பா... குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    சொல்லி அடிக்கும் கில்லி பெண்கள்..! சாதனை மங்கைகள்..!
  3. உலகம்
    டெஸ்லாவில் அதிரடி: மூத்த நிர்வாகிகளை திடீர் பணிநீக்கம்
  4. திருப்பூர்
    திருப்பூா் மாவட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நாளை விடுமுறை
  5. அவினாசி
    அவிநாசிலிங்கேஸ்வரா் கோவில் உண்டியல்கள் திறப்பு
  6. இந்தியா
    மீண்டும் 75,000 புள்ளிகளை எட்டிய சென்செக்ஸ் 22,700க்கு மேல் நிஃப்டி
  7. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  8. வீடியோ
    Happy Birthday Hitman🥳🎂 ! #rohitsharma #rohit #hitman #happy...
  9. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  10. ஈரோடு
    ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் டிஜிட்டல் திரை கோளாறு: ஆட்சியர்...