/* */

புதுச்சேரி மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சி:வைகோ கண்டனம்

Attempt to privatize Puducherry power sector Vaiko condemned

HIGHLIGHTS

புதுச்சேரி மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சி:வைகோ கண்டனம்
X

வைகோ (பைல் படம்)

புதுச்சேரி மின்சரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சிக்கு மதிமுக பொதுச்செயலக் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார் .

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியின் மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியில் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, புதுச்சேரி அரசுக்குப் பல நெருக்கடிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொடுத்து வருகிறது. மின்சாரத் துறை என்பது ஒத்திசைவுப் பட்டியலின் (CONCURRENCE LIST) கீழ் வருவதால், மாநில அரசுகளுக்கு இந்தத் துறையில் முழுமையான அதிகாரம் உள்ளது.

இந்தச் சூழலில்தான், நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி அரசு, தங்களைக் கலந்து ஆலோசிக்காமல் மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்க ஒன்றிய அரசு முன்வந்தபோது, அதனை ஏற்க மறுத்து அந்த முடிவைத் திரும்பப் பெற வேண்டும் என வற்புறுத்தி அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு புதுச்சேரி சட்டமன்றத்தில் 22.07.2020 அன்று தீர்மானம் நிறைவேற்றியது.

அதன் பின்னரும், யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் பகிர்வு நிறுவனங்கள் (DISCOMS) தனியார் மயமாக்கப்படும் என்று 2020 மே திங்களில் அறிவித்து அதற்கான முதல்கட்டப் பணிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. DISCOMS நிறுவனங்களை மீட்டெடுக்க, "ஆத்ம நிர்பார் பாரத் அபியான்" திட்டத்தின்கீழ் நிதி உதவி அளிக்க அந்நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு விதிக்கிறது.

அரசின் தவறான இந்த நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி அரசில் மின்துறைக்கு 285 ஏக்கர் நிலம் உள்ளது; ஐந்து இலட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்; 3,500 அரசு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டுள்ளனர்; 35,000 குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. கார்ப்பரேட்டுகளிடம் மின்சாரத் துறையை விடுவது என்பது பொது மக்களுக்கு மாபெரும் கேட்டினையே விளைவிக்கும். இதன்மூலம் தாறுமாறாக மின்கட்டணம் உயரும்; வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும்; தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும். எனவே, ஒன்றிய அரசும் புதுச்சேரி மாநில அரசும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அரசின் முறைகேடான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து மின்துறைப் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார் மய / கார்ப்பரேசன் மய / எதிர்ப்புப் போராட்டக் குழு மக்களை அணி திரட்டி அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது. மின்துறையைத் தனியார் மயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.


Updated On: 18 Jun 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  2. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  4. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  5. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  7. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  8. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  9. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  10. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?