நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட்

பட்டியலினத்தவர் குறித்த அவதூறு வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு 2வது முறையாக பிடி வாரண்ட் பிறப்பித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நடிகை மீரா மிதுனுக்கு இரண்டாவது முறையாக பிடி வாரண்ட்
X

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

அதன் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கடந்த ஆண்டு அவர் மீராமிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக இருந்த நண்பர் சாம் அபிஷேக்கையும் கைது செய்து பின்பு ஜாமீனில் விடுவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று (ஆகஸ்ட் 6) விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். சுதாகர் , வழக்கின் சாட்சிகளும், மீரா மிதுனின் நண்பர் சாம் அபிஷேக்கும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் மீரா மிதுனும், அவரது வழக்கறிஞரும் ஆஜராகவில்லை.

இதையடுத்து, சாட்சி விசாரணையன்று குற்றம் சாட்டபட்டவர் மற்றும் அவரது வழக்கறிஞர் யாரும் ஆஜராகதது நீதிமன்றத்தை ஏமாற்றுவதாக இருக்கிறது என தெரிவித்த நீதிபதி, நடிகை மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீனில் இருந்து வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். தொடர்ந்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

Updated On: 6 Aug 2022 1:14 PM GMT

Related News

Latest News

 1. திருப்பூர் மாநகர்
  திருப்பூரில் கவுன்சிலர் காரை திருடிய மாணவர் கைது
 2. வழிகாட்டி
  எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெடில் பல்வேறு பணியிடங்கள்
 3. இந்தியா
  அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக இருக்க வேண்டும்: பிரதமர்...
 4. குமாரபாளையம்
  குமாரபாளையம் அருகே காங்கிரஸ் கட்சி பாதயாத்திரை நிறைவு விழா
 5. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் விரைவில் ஏற்றுமதி அபிவிருத்தி மையம்: அமைச்சர்...
 6. குமாரபாளையம்
  அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடை, ஸ்பீக்கர் செட் வழங்கும் விழா
 7. கடையநல்லூர்
  சாம்பவர்வடகரை இந்து கோவிலில் இஸ்லாமியரின் அன்னதானம்
 8. இந்தியா
  சுதந்திர தினம் 2022 இந்தியா புதிய திசையில் செல்லும் வரலாற்று நாள்:...
 9. இந்தியா
  செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்
 10. காஞ்சிபுரம்
  தமிழகத்தில் 13 மாவட்டங்களில் விரைவில் அரிசி அரவை ஆலைகள்: அமைச்சர்...