/* */

ஓமன் நாட்டில் தமிழர் கடத்தல்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்

ஓமன் நாட்டில் கடத்தப்பட்ட தமிழரை மீட்க மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

HIGHLIGHTS

ஓமன் நாட்டில் தமிழர் கடத்தல்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
X

பைல் படம்

ஓமன் நாட்டில் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்ச ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

ஓமன் நாட்டில் அடையாளம் தெரியாத நபர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் பெத்தாலி என்பவரை மீட்டுக் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (21-11-2023) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ஓமன் நாட்டின் துக்ம் துறைமுகத்தில் உள்ள NOOH 1012 மற்றும் YAYA 1184, அல்ரெடா (ஓமானியன்) ஆகிய மீன்பிடிப் படகுகளில் வேலை செய்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 பேர் கொண்ட குழுவில், பெத்தாலிஸ் என்பவரும் பணிபுரிந்து வந்ததாகவும், அந்த மீன்பிடிப் படகுகளில் பணிபுரிந்து வந்த 18 மீனவர்களின் சம்பளத்தை உரிமையாளர் தராததால் உரிமையாளருக்கும், மீனவர்களுக்கும் இடையே பிரச்சனை நிலவி வந்த நிலையில், பெத்தாலிஸ் அவர்களை அடையாளம் தெரியாத சிலர் கடத்திச் சென்றுள்ளதாகவும், அவரை உடனடியாகக் கண்டுபிடித்து, இந்தியாவுக்கு திருப்பி கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு பெத்தாலிஸ் மனைவி ஷோபா ராணிகோரிக்கை விடுத்துள்ளதை முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஓமன் நாட்டிலுள்ள, இந்தியத் தூதரகம் மூலம் பெத்தாலி அவர்களை மீட்டு தாயகம் கொண்டுவர உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 21 Nov 2023 11:59 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!