/* */

நகராட்சி தலைவர்கள், ஆணையர்களின் பயன்பாட்டிற்கு 187 புதிய வாகனங்கள்

New Vehicle - நகராட்சி தலைவர்கள், ஆணையர்களின் பயன்பாட்டிற்கு 187 புதிய வாகனங்களை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

HIGHLIGHTS

நகராட்சி தலைவர்கள், ஆணையர்களின் பயன்பாட்டிற்கு 187 புதிய வாகனங்கள்
X

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சிகளின் பயன்பாட்டிற்காக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 187 புதிய வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

New Vehicle - தமிழகத்தில் உள்ள நகராட்சி தலைவர்கள் மற்றும் பொறியாளர்களின் பயன்பாட்டிற்காக புதிய வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று சென்னை தலைமை செயலத்தில் தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.23கோடியே 66 லட்சத்து 58 ஆயிரம் மதிப்புள்ள 187 வாகனங்களை வழங்கினார்.

மொத்தம் உள்ள 138நகராட்சிகளில் முதல் கட்டமாக 100 நகராட்சிகளின் தலைவர்கள் பயன்பாட்டிற்காக 91ஸ்கார்பியோ கார்களும், ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களின் அலுவலக பயன்பாட்டிற்காக 96 பொலிரோ வாகனங்களும் என மொத்தம் 187 வாகனங்களை முதல் அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, நகராட்சி நிர்வாகதுறை இயக்குனர் பொன்னையா உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2 Aug 2022 6:57 AM GMT

Related News

Latest News

  1. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  6. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு
  10. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு சித்திரை மாத சிறப்பு அபிஷேகம்