/* */

குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்ம ராசிக்காரர்களுக்கு அடிக்க போகுது யோகம்

குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகம் அடிக்க போகிறது. அது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம்.

HIGHLIGHTS

குரு பெயர்ச்சியால் மேஷம், மிதுனம்,சிம்ம ராசிக்காரர்களுக்கு அடிக்க போகுது யோகம்
X

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள். ஆம்... நவகிரகங்களில் குருவிற்கு என தனி மவுசு உண்டு. குரு பார்த்தால் போதும் நமது வாழ்வு சிறக்க. இத்தகைய சிறப்புக்குரிய குரு மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்ப்போமா?

குரு தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி நட்பு ராசியான மேஷ ராசியில் நுழைகிறார். குரு பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கபடி இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி அன்று (சனிக்கிழமை) இரவு 11.48 மணிக்கு மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சியாகும் குரு பகவான் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். இதனால் கீழ்க்கண்ட 3 ராசிக்காரர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.


மேஷம்

இதுநாள்வரை விரைய ஸ்தானத்தில் சஞ்சரித்த குரு பகவான் மேஷ ராசியில் ஜென்ம குருவாக அமரப்போகிறார். மேஷ ராசிக்காரர்களே..ஜென்ம குரு என்று பயப்பட வேண்டாம் குரு அள்ளித்தரப்போகிறார். ஜென்ம குரு வனத்தினிலே என்று சொல்வார்கள். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உங்களுக்கு நிறைய நல்லது நடக்கும். சுப பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு வேலை தொடர்பான சில நல்ல தகவல்கள் வரும். பணி இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவிகள் கூட தாராளமாக கிடைக்கும்.

மிதுனம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு மேன்மைகளை அள்ளித்தரப்போகிறது. குருவின் ராசி மாற்றம் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் ஏற்படலாம். பெரிய பதவிகளை நீங்கள் பெறக்கூடும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை கூடும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புத்திர பாக்கியம் இல்லாமல் மன உளைச்சலில் இருந்தவர்கள் கவலை அடையவேண்டாம். இனி புத்திரபாக்கியம் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு பாக்கியங்களை அள்ளித்தரப்போகிறார். தடைபட்டு வந்த காரியங்கள் தடைகள் இன்றி நிறைவேறும். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் நல்ல வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் இந்த வேளையில் பெறுவீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். பெரிய சாதனைகளை செய்வீர்கள். எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குருபெயர்ச்சி மிகுந்த பலனை தரும் என்பதில் ஐயமில்லை.

Updated On: 10 Feb 2023 7:28 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...