/* */

இணையத்தை கலக்கும் மாத்திரை அட்டை திருமண அழைப்பிதழ்

Marriage Invitation Card Format - மாத்திரை அட்டை வடிவில் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

HIGHLIGHTS

இணையத்தை கலக்கும் மாத்திரை அட்டை திருமண அழைப்பிதழ்
X

Marriage Invitation Card Format -திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் எழிலரசன் என்பவருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வரும் வசந்தகுமாரி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

அடுத்தமாதம் செப்.5-ம் தேதி நடைபெறும் திருமணத்திற்காக இவர்கள் அச்சிட்டுள்ள அழைப்பிதழ் தான் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் எழிலரசன் தனது திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை போல வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.

மாத்திரை அட்டையில் பின்புறம் மருந்து பெயர், டோஸ் அளவு, காலாவதி தேதி உள்ளிட்ட முக்கிய தகவல்கள் இடம் பெற்று இருப்பது போலவே இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் அதில் இடம் பெற்று உள்ளது.

தகவல்கள் மருந்தின் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் "எழில்வசந்தா-செப்-05" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மூலப் பொருட்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெயரும், அவர்களது கல்வி விவரங்கள், வேலை குறித்த தகவல்கள் இடம் பெற்று இருக்கிறது.

காலாவதி தேதி இருக்கும்இடத்தில் திருமணம் மற்றும் வரவேற்பு நாள் குறித்த தகவல்கள் இடம் பெற்று உள்ளன.

மேலும், மாத்திரையின் தயாரிப்பு நிறுவனத்தின் தகவல்கள் இருக்கும் இடத்தில் மணமக்களின் பெற்றோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.


மேலும் அன்றைய தினம் தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது, அன்னை தெரசா நினைவு தினம், வ.உ.சி.பிறந்தந்தினம் போன்ற பொது அறிவு தகவல்களையும் தந்துள்ளனர்.

எச்சரிக்கை எனக் குறிப்பிட்டு நண்பர்கள், உறவினர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் எனக் குறிப்பிட்டு அசத்தியுள்ளார்

திருமணம் நிச்சயமானதுமே பத்திரிகை அடிக்க நாள் பார்த்து, பஞ்சாங்கம் பார்த்து, பிரிண்டிங் கொடுத்து, பின்னர் ப்ரூப் பார்த்து அதில் திருத்தம் செய்து என பத்திரிகை அடிக்கும் விஷயமே பல சிரமங்களுக்கு பிறகு நிறைவு பெறும் நிலையில், இதுபோன்று வித்தியாசமாக பத்திரிகை அடித்து கலக்கியுள்ளது இணையத்தில் வைரலாகி உள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 22 Aug 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...